NATIONAL

மாநிலத் தேர்தல்களுக்கான பிரச்சாரத்தில் அரசாங்க சொத்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்

கோலாலம்பூர், ஜூன் 26 – எதிர்வரும் மாநிலத் தேர்தல்களுக்கான பிரச்சாரத்தில் அரசாங்க சொத்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று தகவல் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் நினைவூட்டினர் .

இன்று இரவு கிளந்தான் தகவல் துறை  அதிகாரிகளுடனான ஒப்பந்த அமர்வின் போது இந்த விவகாரத்தின் மீது அவர் கருத்து தெரிவித்தார்.

“இது போன்ற அமர்வு மூலம், அவர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும், ஆலோசனைகளை வழங்கவும் மற்றும் உடனடி கவனம் தேவைப்படும் பிரச்சினைகளை எழுப்பவும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்.

“அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி அரசியல் கட்சிகளுக்குப் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்று அனைத்து தகவல் துறை அதிகாரிகளுக்கும் நான் நினைவூட்டுகிறேன்,” என்று அவர் ஒரு முகநூல் பதிவில் தெரிவித்தார்.

சிலாங்கூர், பினாங்கு, நெகிரி செம்பிலான், திரங்கானு, கெடா மற்றும் கிளந்தான் ஆகிய ஆறு மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

– பெர்னாமா


Pengarang :