NATIONAL

மாநிலத் தேர்தல்: நம்பகமான, வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களுக்கு வாய்ப்பு

கிள்ளான், ஜூன் 26- விரைவில்
நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலில்
பக்காத்தான் ஹராப்பான் (ஹரப்பான்)
மற்றும் பாரிசான் நேஷனல் (பிஎன்)
ஆகிய கட்சிகள் நம்பகத்தன்மை கொண்ட
மற்றும் வெற்றி வாய்ப்பு உள்ள
வேட்பாளர்களை
முன்னிலைப்படுத்தவுள்ளன.

இந்தக் கூட்டணியின் தேர்தல் சூட்சமம் வெற்றியை அடிப்படையாகக்
கொண்டது என்று சிலாங்கூர் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி கூறினார்.

வெற்றி சூட்சமம் என்பது அனைத்து
வேட்பாளர்களும் நம்பகத்தன்மை
கொண்டவர்களாக இருக்க வேண்டும்
என்பதோடு ஒற்றுமை அரசாங்கத்தில்
இடம் பெற்றுள்ளக் கட்சிகளின்
ஆதரவையும் பெற்றிருக்க வேண்டும்
என்பதாகும் என்று அவர் சொன்னார்.

நாங்கள் வெற்றி பெறக்கூடிய
வேட்பாளரை களமிறக்க
முயற்சிப்போம். ஏனென்றால் நாங்கள் இந்த தேர்தலில் வெற்றி
பெற்றாக வேண்டும். நாங்கள் ஆட்சியில்
உள்ளவர்கள் என்பதோடு ஆட்சி
காலத்தில் சாதனைகளையும்
படைத்துள்ளோம் என்றார் அவர்

நேற்று இங்கு நடைபெற்ற சுங்கை
காண்டீஸ் தொகுதி நிலையிலான
ஹராப்பான் மற்றும் பாரிசான்
கூட்டணியின் #அருஸ்மேராகுனிங்
தேர்தல் இயந்திரத்தை தொடக்கி
வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம்
அவர் இதனைத் தெரிவித்தார்.

சிலாங்கூரில் 15 ஆண்டுகால ஹராப்பான்
நிர்வாகத்தின் சிறப்பான ஆட்சி மக்கள்
இக்கூட்டணியுடன் தொடர்ந்து பயணிப்பதற்கான வாய்ப்பை
ஏற்படுத்தும் எனத் தாம் நம்புவதாக அமிருடின் கூறினார்.

மேலும், இப்போது நிர்வாகத்தில்
அனுபவம் வாய்ந்த தேசிய முன்னணியின்
சில நண்பர்கள் நம்முடன் உள்ளனர்.
எனவே இந்த கூட்டணி
நிலைத்தன்மையை வலுப்படுத்தும்
அதேவேளையில் தேசிய
பொருளாதாரத்தை மீட்டெடுப்பதிலும்
முக்கியப் பங்கினை ஆற்றும் என்று அவர்
கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,
ஹராப்பான் மற்றும் பாரிசான்
இடையேயான தொகுதி ஒதுக்கீடு
தொடர்பான பேச்சுவார்த்தை ஹாஜ்ஜூப்
பெருநாளுக்குப் பிறகு முடிவடையும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.


Pengarang :