SELANGOR

பொதுமக்கள் ஒத்துழைப்புடன் ஏடிஸ் கொசு ஒழிப்பு இயக்கம்- சுகாதார அலுவலகம் மேற்கொண்டது

ஷா ஆலம், ஜூன் 26- குடியிருப்பாளர் சங்கத்தின் ஒத்துழைப்புடன் உலு
சிலாங்கூர் மாவட்டச் சுகாதார அலுவலகம் பத்தாங் ஜாலான் மெராந்தி 3ஏ
பண்டார் பாரு பத்தாங் காலி குடியிருப்பு பகுதியில் துப்புரவுப் பணியை
மேற்கொண்டது.

ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழிப்பதன் மூலம் டிங்கி
காய்ச்சல் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக பொதுமக்கள்
மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு
நடத்தப்பட்டதாக மாவட்டச் சுகாதார அதிகாரி டாக்டர் சுஹைடா முகமது
சீடேக் கூறினார்.

இந்த துப்புரவு இயக்கத்தின் போது வீடுகளிலும் வீடுகளின் பின்புறம் உள்ள
வழித்தடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதிகரித்து வரும்
டிங்கி காய்ச்சல் சம்பவங்களைப் பொதுமக்கள் அலட்சியப்படுத்தி
விடக்கூடாது என்று அவர் தெரிவித்தார்.

தங்கள் வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் சுத்தப்படுத்திய பொது
மக்களுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ஏடிஸ்
கொசுக்களை ஒழிப்பதற்கும் நாம் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என்று
அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


Pengarang :