NATIONAL

சிலாங்கூரில் உள்ள ஐந்து மாவட்டங்களில் மாலை வரை இடியுடன் கூடிய கனமழை

ஷா ஆலம், ஜூன் 26: சிலாங்கூரில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இன்று மாலை வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது.

அவை சபாக் பெர்ணம், கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர், கோம்பாக் மற்றும் உலு லங்காட் ஆகிய மாவட்டங்கள் ஆகும். கோலாலம்பூரிலும் இதே வானிலைதான் இருக்கக்கூடும்.

மேலும், நெகிரி செம்பிலான், சரவாக், பினாங்கு, கெடா மற்றும் பேராக் போன்ற வடக்குப் பகுதியில் உள்ள பல மாநிலங்களிலும் இதே வானிலைதான் நிலவும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லிமீட்டர் (மி.மீ./மணி)க்கு மேல் மழை பெய்யும் தீவிரம் கொண்ட இடியுடன் கூடிய மழைக்கான அறிகுறிகள் தென்படுவது குறித்து எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

மெட்மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு அல்லது அதற்கும் மேலாகப் பெய்யும் போது எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன. இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்புஎன்பது ஒரு குறுகியக் கால எச்சரிக்கை ஆகும்.

சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்குப் பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது myCuaca பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்யவும்.


Pengarang :