NATIONAL

ஆயதப்படை முகாமில் பயிற்சியின் போது வெடி விபத்து- காயமுற்றப் பயிற்றுநரின் உடல் நிலை சீராக உள்ளது

சிரம்பான், ஜூன் 26- துப்பாக்கிச் சுடுதல் மற்றும் கையெறி குண்டு
பயிற்சியின் போது நேர்ந்த விபத்தில் காயமுற்ற அரச மலேசிய
ஆகாயப்படை பயிற்சியாளரின் உடல் தற்போது சீராக உள்ளது.

இந்த சம்பவம், கிம்மாஸ், சைட் சிராஜூடின் அடிப்படை வெடிகுண்டு
தளத்தின் குறி சுடும் மற்றும் கையெறி குண்டு பயற்சி களத்தில் நேற்று
நிகழ்ந்தது.

இச்சம்பவத்தில் காயமுற்ற செண்டாயான் ஆகாயப்படை தளத்தின் நிர்வாக
மற்றும் மேலாண்மைப் பயிற்சிக் கழகத்தின் பயிற்றுநரான கார்ப்ரல்
கைருள் ஜமான் லோக்மான் (வயது 35) சிகாமாட் மருத்துவமனையின்
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுதிக்கப்பட்டுள்ளதாக அரச மலேசிய ஆகாயப்படை அறிக்கை ஒன்றில் கூறியது.

நேற்று பிற்பகல் 12.10 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் பயிற்சி
மாணவரான முகமது இக்மால் மஸ்டி (வயது 22) உயிரிழந்த வேளையில்
ஆகாயப் படை பயிற்றுநரான கார்ப்ரல் சுயிப் பிடின் (வயது 33) கிசிச்சை
பலன்றி சிகாமாட் மருத்துவமனையில் காலமானார்.

இந்த விபத்து குறித்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம்
தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு
உரிய சமூக நல உதவிகள் வழங்கப்படும் என்பதோடு நல்லடக்கச்
சடங்குகளும் உரிய முறையில் மேற்கொள்ளப்படும் என
ஆகாயப்படையின் அறிக்கை குறிப்பிட்டது.


Pengarang :