NATIONAL

18 முதல் 20 வயதுக்குட்பட்ட தகுதியானவர்களில் கணக்குகளில் RM200 உதவித்தொகை செலுத்தப்படும் – இ-பெல்லிய ராஹ்மா

ஷா ஆலம், ஜூன் 26: இன்று முதல் இளைஞர்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் (IPT) 18 முதல் 20 வயதுக்குட்பட்ட தகுதியானவர்களில் கணக்குகளில் RM200 உதவித்தொகை செலுத்தப்படும்.

எனவே, பெறுநர்கள் தங்கள் கல்வி மற்றும் பிற தேவைகளுக்காக இ-பெல்லிய ராஹ்மா (eBeliaRahmah) உதவியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.

“தகுதியுடைய இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பல்வேறு இ-வாலட் தளங்கள் மூலம் RM200 மதிப்பிலான பணத்தைப் பெற இப்போது பதிவு செய்யலாம்.

“இந்த பணம் சிறந்த முறையில் பயன்படுத்தப்படும் என்று நான் நம்புகிறேன்,” என்று பிரதமர் இன்று முகநூலில் தெரிவித்துள்ளார்.

ஜூன் 26 முதல் ஆகஸ்ட் 22 வரை பூஸ்ட், செட்டல், அல்லது தச் அன்ட் கோ இ-வாலட் மூலம் இப்பணத்தைப் பெற்று கொள்ளலாம் என்று பிரதமர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட இ-வாலட் சேவை வழங்குநர்கள் இத்திட்டக் கால முழுவதும் வவுச்சர்கள், கேஷ்பேக் மற்றும் வெகுமதி புள்ளி தள்ளுபடிகள் வடிவில் கூடுதல் சலுகைகளை வழங்குவார்கள்.

மேலும் தகவலுக்கு https://budget.mof.gov.my/manfaat/faq/ebeliarahmah.htm ஐப் பார்வையிடவும்.


Pengarang :