SELANGOR

சிலாங்கூர் மாநில நர்சரி கழகம் (PTNS) 100 சாதனங்களைப் பெற்றுள்ளது –  சிலாங்கூர் அடிப்படை தொழில்நுட்பக் கடன் திட்டம்

ஷா ஆலம், ஜூன் 26: சிலாங்கூர் அடிப்படை தொழில்நுட்பக் கடன் திட்டத்தின் மூலம் சிலாங்கூர் மாநில நர்சரி கழகம் (PTNS) 100 சாதனங்களைப் பெற்றுள்ளது.

சிலாங்கூர் பொது நூலகக் கழகம் (பிபிஏஎஸ்) 50 மடிகணினிகள் மற்றும் 50 கணினிகளைப் பெற்றுள்ளது, அவை சிலாங்கூர் முழுவதும் உள்ள நர்சரிகளுக்கு விநியோகிக்கப்படும்.

“இந்த திட்டம் தேசியக் குழந்தைகள் தரவு மைய அமைப்பில் (NCDC) நர்சரி பள்ளி குழந்தைகளின் விவரங்களை ஆசிரியர்கள் எளிதாகப் புதுப்பிப்பதற்கு ஆகும்

குழந்தைகளின் வளர்ச்சியை கண்காணிக்கும், சமூக நலத் துறைக்கு (ஜேகேஎம்) அனுப்ப வேண்டிய தகவலைப் புதுப்பிக்க, ஒவ்வொரு நர்சரியும் இந்தத் தரவை நிரப்புவது அவசியமாகும்.

“இது உடல், மன, உணர்ச்சி, மொழி வளர்ச்சி, கணிதத்தின் ஆரம்ப வளர்ச்சி மற்றும் சிந்தனை திறன் உட்பட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது” என்று சிலாங்கூர் பொது நூலகக் கழகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிலாங்கூர் மாநில நர்சரி கழக நிர்வாகத்தின் கீழ் உள்ள ஆசிரியர்கள் தங்கள் கடமைகளைத் திறம்படச் செய்ய இந்த திட்டம் உதவும் என்று சிலாங்கூர் பொது நூலகக் கழகம் நம்புகிறது.

முன்னதாக, ஏப்ரல் 1 ஆம் தேதி வரை மொத்தம் 175 நபர்கள் செபின்டாஸ் (Sepintas) மூலம் கணினிகளைக் கடன் வாங்கியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என பிபிஏஎஸ் தெரிவித்துள்ளது.

B40 மாணவர்களிடையே டிஜிட்டல் பிளவைக் குறைக்க மாநில அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி செபின்டாஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.


www.ppas.gov.my/form_sepintas என்ற இணைப்பில் விண்ணப்பம் செய்வது மூலம் அதன் 50 கிளைகளில் கணினிகளைக் கடன் பெறலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.


Pengarang :