NATIONAL

சிறையில் இருக்கும் மகளை மீட்டுத் தருவதாகக் கூறிய நபரிடம் மூதாட்டி வெ.35 லட்சம் இழந்தார்

ஜொகூர் பாரு, ஜூன் 27- காஜாங்
சிறையில் இருக்கும் தன் மகளை மீட்டுத்
தருவதாகக் கூறிய நபரை நம்பி மூதாட்டி
ஒருவர் 35 லட்சம் வெள்ளியை
இழந்துள்ளார்.

சொஸ்மா சட்டத்தில் கைது செய்யப்பட்டு
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் காஜாங்
சிறையில் இருக்கும் தன்
மகளைக் காப்பாற்ற தொழிலதிபரான 67
வயது மூதாட்டி முயற்சி
மேற்கொண்டதாக ஜொகூர் மாநில
துணைப் போலீஸ் தலைவர் எம்.குமரன்
கூறினார்.

கடந்த 2020 மார்ச் மாதத்தில் உள்ளூர்
ஆடவர் ஒருவரின் தொடர்பு அந்த
மூதாட்டிக்குக் கிடைத்துள்ளது.
சிறையில் இருக்கும் மகளைப் காப்பாற்ற
முடியும் என்றும் ஆனால் அதற்குப் பணம்
செலுத்த வேண்டும் என அவ்வாடவர்
கூறியுள்ளார்.

இதனை நம்பிய அந்த மூதாட்டி 35 லட்சம்
வெள்ளியை கடந்த 2020 மாதம் முதல் இம்மாதம் வரை கட்டங்
கட்டமாக அவ்வாடரிடம் தந்துள்ளார் என அவர் சொன்னார்.

எனினும், பணம் முழுமையாகச்
செலுத்தப்பட்டப் பின்னரும் தன் மகள்
விடுவிக்கப்படாததால் இது குறித்து
அம்மூதாட்டி போலீசில் புகார் செய்ததாகக்
குமரன் சொன்னார்.

இந்த மோசடி தொடர்பில் 35 வயது நபர்
ஒருவரைத் தமது தரப்பு ஜொகூர் பாருவில்
இம்மாதம் 16ஆம் தேதி கைது
செய்ததாகவும் அவர் கூறினார்.


Pengarang :