NATIONAL

பினாங்கு சட்டமன்றம் ஜூன் 28 கலைக்கப்படலாம் – யாங் டிபெர்துவா துன் அஹ்மட் புசி அப்துல் ரசாக் உடன் சந்திப்பு

ஜார்ஜ் டவுன், ஜூன் 27 – பினாங்கு சட்டமன்றத்தை ஜூன் 28 அன்று கலைக்க ஒப்புதல் பெற பினாங்கு யாங் டிபெர்துவா துன் அஹ்மட் புசி அப்துல் ரசாக்கைச் சந்திக்க தனக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் சொவ் கோன் இயோவ் தெரிவித்தார்.

“நான் கவர்னர் அலுவலகத்தில் இருந்து அனுமதி பெற்றுள்ளேன், இன்று காலை 8 மணிக்கு அவரை சந்தித்து, அதன்பிறகு, பிற்பகல் 2.30 மணிக்கு அனைத்து மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளும் வகையில் கொம்தாரில் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்துவோம்” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

பினாங்கில் 40 மாநிலத் தொகுதிகள் உள்ளன. 14வது பொதுத் தேர்தலில் (GE14), பக்காத்தான் ஹராப்பான் 37 (பெர்சத்துவின் 2 இடங்கள் உள்ளடக்கியது), பிஎன் 2, பாஸ் 1யும் வென்றன.

சிலாங்கூர், நெகிரி செம்பிலான், கெடா, கிளந்தான் மற்றும் திராங்கானுவுடன் சேர்ந்து பினாங்கு மாநிலத் தேர்தலும் விரைவில் நடைபெறவுள்ளது.

இதற்கிடையில், பினாங்கு பக்காத்தான் ஹராப்பான் தலைவரான சோவ், இம்முறை கூட்டணி 30 முதல் 32 இடங்களை வெல்லும் என்று கூறினார்.

அந்த இலக்கை அடைவது திருப்திகரமான முடிவாகக் கருதப்படும் என்றார்.

– பெர்னாமா


Pengarang :