NATIONAL

ஒற்றுமை அரசாங்கத்திற்கு இந்தியர்கள் முழு ஆதரவை வழங்குவர்! அமைச்சர் சிவகுமார் நம்பிக்கை

ஷா ஆலம் ஜூன் 27-
விரைவில் நடைபெறவிருக்கும் ஆறு
மாநில சட்டமன்றத் தேர்தலில் இந்திய
சமுதாயம் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை
அரசாங்கத்திற்குப் பிளவுபடாத ஆதரவை
வழங்கும் என்று மனிதவள அமைச்சர் வ
சிவகுமார் நம்பிக்கைத் தெரிவித்தார்.

கடந்த பொதுத் தேர்தலில் இந்தியர்கள்
பக்கத்தான் ஹராப்பானுக்கு முழு ஆதரவு
வழங்கினர். இதன் மூலம் அன்வார் தலைமையில் அமைக்கப்பட்ட
ஒற்றுமை அரசாங்கத்தில் பக்கத்தான்
ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணி இடம் பெற்றது.

இப்போது ஒற்றுமை அரசாங்கம் சிறந்த
முறையில் நாட்டை வழிநடத்தி வருகிறது.
மக்களும் சுபீட்சமாக வாழ்ந்து
வருகின்றனர்.

வருங்காலத்தில் நாட்டின் பொருளாதாரம்
சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் ஒரு
நல்ல அரசாங்கம் தேவை. அந்த வகையில்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம்
அனைத்து இன மக்களையும்
அரவணைத்து செல்கிறது.

விரைவில் நடைபெறவிருக்கும் ஆறு
மாநிலச் சட்டமன்றத் தேர்தல் மிகவும்
சவாலாக அமைந்தாலும் இந்தியர்கள்
ஒற்றுமை அரசாங்கத்திற்கு முழுமையாக
ஆதரவை வழங்குவார்கள் என்று அவர்
சொன்னார்.

டேலண்ட் கார்ப். (Telent Corp) மற்றும்
சிலாங்கூர் மாநில மனிதவள இலாகா
ஏற்பாட்டில் நேற்று இங்கு நடைபெற்ற
தொழில் திறன் -தொழில்நுட்ப
துறைகளில் தேர்ச்சி பெற்ற
மாணவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கும்
நிகழ்ச்சிக்குப் பின்னர் நிருபர்களிடம் சிவகுமார்
இவ்வாறு தெரிவித்தார்.


Pengarang :