SELANGOR

மலேசியத் தன்னார்வத் துறை (ரேலா) கட்டிடத்தைப் புதுப்பிக்க மொத்தம் RM20,000 ஒதுக்கீடு – சிலாங்கூர் பென்யாயாங் திட்டம்

ஷா ஆலம், ஜூலை 1: சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் (PSP) கீழ் சுங்கை ரமால் லுவாரில் உள்ள மலேசியத் தன்னார்வத் துறையைப் (ரேலா) புதுப்பிக்க மொத்தம் RM20,000 ஒதுக்கப்பட்டது.

மே 10 முதல் ஜூன் 10 வரை புதுப்பிக்கும் பணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. கூரையின் ஓட்டையைச் சரி செய்தல், கான்கிரீட் தளம், மற்றும் கட்டிடத்திற்குச் சாயம் பூசுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

‘‘காலங்காலமாகச் செயல்பாட்டு மையமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் இந்தக் கட்டிடத்தை சீரமைக்க ஒப்புதல் அளித்தோம்.

“இந்த பகுதியில் உள்ள மக்களுக்குச் சேவை செய்யும் கழங்களின் வசதிகளுக்காக இத்திட்டம் செயல்படுகிறது. இதனால் அவர்கள் தங்கள் கடமைகளைச் சிறப்பாகவும் வசதியாகவும் செய்ய முடியும்” என்று மஸ்வான் ஜோஹர் கூறினார்.

சிலாங்கூர் மக்களின் நலனுக்காகச் சிறிய திட்டங்கள் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்த சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்திற்கு 2023 பட்ஜெடில் RM28 மில்லியன் ஒதுக்கப்பட்டது.


Pengarang :