NATIONAL

ஹராப்பான்- பாரிசான் தொகுதி பங்கீடு தொடர்பில் ஓரிரு நாட்களில் அறிவிப்பு

ஜோர்ஜ் டவுன் ஜூலை 4- விரைவில்
நடைபெறவிருக்கும் மாநில தேர்தலில்
பக்கத்தான் ஹராப்பன் மற்றும் பாரிசான்
நேஷனல் இடையிலான தொகுதி பங்கீடு
தொடர்பான இறுதி முடிவினை அவ்விரு
கூட்டணிகளின் தலைமைத்துவ மன்றம்
இன்னும் ஒரு நாட்களில் அறிவிக்கும்.

இந்தத் தொகுதி பங்கீடு இறுதியானது
என்றும் இந்த முடிவினை அனைத்து
தரப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்
என்றும் பரிசான் நேஷனல்
துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ முகமது
ஹசான் கூறினார்.

தொகுதி பங்கீடு தொடர்பான முடிவினை
தலைமைத்துவ மன்றம் வெளியிடும்
போது, அனைத்து தரப்பினரும் குறிப்பாக
மாநில நிலையில் உள்ளவர்கள் அதனை
ஏற்றுக் கொள்வார்கள் என நான்
நம்புகிறேன். அவ்வாறு செய்யாவிடில்
இந்த பிரச்சனைக்குத் தீர்வே காண
முடியாது என்பதோடு இது ஒரு
இக்கட்டான சூழ்நிலையும் உருவாக்கும்
என்று அவர் குறிப்பிட்டார்.

அந்த முடிவுகளை உங்களால் ஏற்றுக்
கொள்ள முடியாவிட்டாலோ நீங்கள்
அதிர்ச்சி அடைந்தாலோ மாநிலத்
தேர்தலில் நாம் சிறப்பான முறையில்
செயல்பட முடியாது போகலாம்.
தேர்தலில் நாம் வெற்றி பெறுவதுதான்
முக்கியமானதாகும் என்று அவர்
குறிப்பிட்டார்.

பினாங்கு மாநிலத்துக்கு நேற்று
மேற்கொண்ட அதிகாரப்பூர்வ பணி
நிமித்த பயணத்தின் போது
செய்தியாளர்களிடம் அவர் இதனை
தெரிவித்தார்.

இந்த ஆறு மாநிலங்களின் தேர்தலுக்கான
தேசிய முன்னணியின் தயார் நிலை
குறித்து தம் மன நிறைவு

கொள்வதாக தற்காப்பு அமைச்சருமான
ஹசான் சொன்னார்.

கடந்தாண்டு நடைபெற்ற 15 வது பொது
தேர்தல் முதல் பாரிசான் நேஷனல்
மற்றும் அம்னோ தீவிரமாக
களப்பணியாற்றி வருகின்றன. தேர்தல்
இயந்திரம் மேலும் ஆக்ககரமான
முறையில் இருப்பதை உறுதி செய்வதற்கு
தீவிரம் காட்டி வருகிறோம் என்று அவர்
சொன்னார்.

பெரிக்காத்தான் நேஷனல் வரும் மாநிலத்
தேர்தலில் பெரிய பெரும் சவாலை
ஏற்படுத்துமா? என வினவப்பட்ட போது
அந்த சவாலை எதிர் கொள்ள வலுவான
அரணை பாரிசான் மற்றும் பக்காதான்                                                                                           கூட்டணி உருவாக்கும் என்று அவர் பதில்
அளித்தார்.

பெரிக்கத்தான் அலையா? அப்படி
ஒன்றும் பெரிதாக எதையும் நான்
காணவில்லை . நாம் நம்மை
வலுப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது.
நாம் வலுவாக இருந்தால், ஒரே குழுவாக
செயல்பட்டால் எந்த அலையையும்
முறியடிக்க முடியும் என அவர் மேலும்
சொன்னார்.


Pengarang :