SELANGOR

சுங்கை காண்டீஸ் தொகுதியில் 44 முறை நடைபெற்ற மலிவு விற்பனை வழி ஆயிரக்கணக்கானோர் பயனடைந்தனர்

ஷா ஆலம் ஜூலை 4- இவ்வாண்டில் இதுவரை சுங்கை காண்டிஸ் தொகுதியில் 44 முறை ஏசான் ரஹ்மா மலிவு விற்பனை நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த மலிவு விற்பனையின் வாயிலாக ஆயிரக்கணக்கானோர் குறிப்பாக குறைந்த வருமானம் பெரும் பி40 தரப்பினர் பயன் பெற்றுள்ளதாக சுங்கை காண்டீஸ் தொகுதி நடப்பு சட்டமன்ற உறுப்பினர் முகமது ஜவாவி அகமது முக்னி கூறினார்.

சுங்கை காண்டீசில் வசிப்பவர்களில் பெரும்பாலோர் குறைந்த வருமானம் பெறும் பி40
தரப்பினராகவும் சொந்த தொழில் செய்யக்கூடியவர்களாகவும் மூத்தக் குடிமக்களாகவும் உள்ளதாக அவர் சொன்னார்.

இதன் அடிப்படையில் இத்தொகுதியில் உள்ள கிராமங்களில் நடத்தப்பட்ட மலிவு விற்பனைகளின் வாயிலாக அத்தியாவசிய உணவுப் பொருட்களை மலிவான வேளையில் வாங்குவதற்குரிய வாய்ப்பு அவர்களுக்கு கிட்டியது என அவர் தெரிவித்தார்.

இதுபோன்ற மலிவு விற்பனை நிகழ்வுகள் இத்தொகுதியில் அதிகமாகவும் அடிக்கடியும் நடத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளதாக முகமது முக்னி மேலும் குறிப்பிட்டார்.

அதிகமானோர் இத்தகைய மலிவு விற்பனைகளில் கலந்துகொண்டு பயன் பெறுவதற்கு
ஏதுவாக இந்த மலிவு விற்பனையை வார இறுதி நாட்களில் தொடர்ந்து நடத்தும்படி தங்கள்
சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டு கழகத்தை கேட்டுக் கொள்ளவுள்ளதாகவும் அவர்
சொன்னார்.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10 வெள்ளிக்கும், ஒரு தட்டு முட்டை 10 வெள்ளிக்கும் இறைச்சி பத்து வெள்ளிக்கும், கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6 வெள்ளிக்கும், ஐந்து கிலோ சமையல் எண்ணெய் 25 வெள்ளிக்கும், 5 கிலோ அரிசி 10 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது


Pengarang :