SELANGOR

வாகனம் இல்லாத தினத்தில் பூனைகளைத் தத்தெடுக்கும் நிகழ்ச்சி

ஷா ஆலம், ஜூலை 4: ஜூலை 9 அன்று, ஷா ஆலம் வாகனம் இல்லாத தினத்தில்  பூனைகளைத் தத்தெடுக்கும் நிகழ்ச்சி எம்பிஎஸ்ஏ டத்தாரான் மெர்டேகா, செக்‌ஷன் 14 இல் ஷா ஆலம் மாநகராட்சியால் (எம்பிஎஸ்ஏ) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமூகத்தின் மத்தியில் பொறுப்பாக செல்லப்பிராணிகளை வளர்ப்பது குறித்த விழிப்புணர்வு அதிகரிக்க இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அதன் கார்ப்பரேட் மற்றும் மக்கள் தொடர்புத் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“காலை 7 மணி முதல் 10.30 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 10 பூனைகள் தத்தெடுக்கலாம். தத்தெடுக்கப்படுவதற்கு முன், அப்பூனைகளுக்குத் தடுப்பூசி போடப்பட்டு மேலும் சுகாதார பரிசோதனை செய்யப்பட்டிருக்கும்.

“இந்த திட்டம் தூய்மையான மற்றும் பாதுகாப்பான சுற்றுச்சூழலுக்காகச் செல்லப்பிராணிகள் மீது அதிக பொறுப்புடன் இருக்க அனைத்து தரப்பினரின் தொடர்ச்சியான ஒத்துழைப்பையும் ஊக்குவிக்கிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், முதல் 10 பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே இலவசப் பங்கேற்புடன் ஷா ஆலம் மாநகராட்சி பூனைகளுக்கான அழகு போட்டியை நடத்தும்.


முதலாம், இரண்டாம் மூன்றாம் இடம் வரை வெற்றி பெறுபவர்கள் RM200, RM150, RM100 மற்றும் ஒரு ஹேம்பரைப் பெறுவர்.


Pengarang :