SELANGOR

தேசிய அளவிலான ஏடிஸ் மகா ஒழிப்பு 1.0 திட்டம்

ஷா ஆலாம், ஜூலை 5: ஜூலை 9ஆம் தேதி தேசிய அளவிலான ஏடிஸ் மகா ஒழிப்பு 1.0 திட்டம், பத்து கேவ்ஸ் மக்களவை தொகுதியில் தொடங்கப்படவுள்ள மடாணி  அஃபியத் திட்ட தொடக்கத்தை  குறிக்கும் பெரிய திட்டங்களில் ஒன்றாகும்.

‘ஒரு மணி நேர மலேசியாவைச் சுத்தப்படுத்துதல்’ நிகழ்ச்சியோடு இணைந்து மேற்கண்ட நிகழ்வு காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற மலேசியச் சுகாதார அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இ-ஸ்போர்ட்ஸ் விளையாட்டுகள், சோனி பிளேஸ்டேஷன் 5 (பிஎஸ்5) மற்றும் சோனி பிளேஸ்டேஷன் 4 (பிஎஸ்4) மற்றும் பிளேஸ்டேஷன் வி ஆர் போன்ற பல்வேறு அற்புதமான நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

அதே நாளில், தொற்று அல்லாத நோய்களை (NCD) இலவசமாகக் கண்டறியும் தேசியச் சுகாதாரப் பரிசோதனை (NHSI) திட்டத்திலும் வருகையாளர்கள் பங்கேற்கலாம்.


கர்ப்பப்பை புற்றுநோயைக் கண்டறியும் மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) பரிசோதனையையும் நடமாடும் வேன் மூலம் மார்பக புற்றுநோய் பரிசோதனையையும் மேற்கொள்ளும் வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்.


Pengarang :