NATIONAL

மலேசியாவில் தொடர்ந்து செயல்பட 96 விழுக்காட்டு ஜப்பானிய நிறுவனங்கள் விருப்பம்

கோலாலம்பூர், ஜூலை 6- மலேசியாவில் தொடர்ந்து செயல்பட 96
விழுக்காட்டு மலேசிய நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.
அவற்றில் பாதி நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தை விரிவாக்கம்
செய்வதற்கும் எண்ணம் கொண்டுள்ளன.

ஜப்பானின் வெளி வர்த்தக நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இவ்விபரம்
தெரிய வந்துள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
விரிவாக்க அளவு ஆசியான் நாடுகளின் சராசரி அளவைவிட அதிகம்
என்பதோடு இப்பிராந்தியம் எண்ணிக்கை ரீதியாக இரண்டாவது
பெரியதாகும் ஆகும் என்று நிதியமைச்சருமான அவர் சொன்னார்.

மலேசியாவுக்கும் ஜப்பானுக்குமிடையிலான வலுவான அரச தந்திர
உறவுகள் தற்போது 65ஆம் ஆண்டை எட்டியுள்ளது. மலேசியா ஜப்பானின்
மிக முக்கியமான மற்றும் நான்காவது மிகப்பெரிய வர்த்தக பங்காளி
ஆகும். கடந்தாண்டு இரு நாடுகளின் வர்த்தக மதிப்பு 4,121 கோடி
அமெரிக்க டாலரை (18,151 கோடி வெள்ளி) எட்டியது என அவர்
குறிப்பிட்டார்.

உற்பத்தி துறைகளில் மலேசியாவுக்கான மிகப்பெரிய அந்நிய நேரடி
முதலீட்டு நாடாகவும் ஜப்பான் விளங்குகிறது என்று அவர் தெரிவித்தார்.
கடந்தாண்டில் 2,725 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள 2,746 முதலீட்டுத்
திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு அதன் மூலம 336,326 வேலை வாய்ப்புகள்
ஏற்படுத்தப்பட்டன.

இவ்வாண்டில் 2,300 கோடி டாலர் மதிப்பிலான முதலீட்டு வாய்ப்புகளை
நாம் ஜப்பானிடமிருந்து பெற்றுள்ளோம் என அவர் தனது பேஸ்புக் பதிவில்
குறிப்பிட்டுள்ளார்.


Pengarang :