NATIONAL

யு.எஸ்.எம். பேராசிரியர் சிவமுருகன் உரை- பிரதமர் அன்வார் பாராட்டு

கோலாலம்பூர், ஜூலை 6 – மலேசியப்
பல்கலைக் கழகப் (யுஎஸ்எம்)
பேராசிரியராக நியமிக்கப்பட்டப் பின்னர்
தனது முதலாவது உரையை நிகழ்த்திய
அரசியல் ஆய்வாளர் சிவமுருகன்
பாண்டியனுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிம் தனது
வாழ்த்துகளைத் தெரிவித்துக்
கொண்டுள்ளார்.

நீங்கள் இன்னும் சிறப்பான சேவை
செய்து நாட்டுக்குப் பயன்மிக்க
ஆலோசனைகள் மற்றும் நிபுணத்துவத்தை வழங்குவீர்கள்
என்று எதிர்பார்க்கிறேன் என அவர்
டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு
ஊடகவியலாளர்களால் அடிக்கடி
நேர்காணல் செய்யப்படும் அரசியல்
ஆய்வாளரான சிவமுருகன், நேற்று
காலை பினாங்கு, யு.எஸ்.எம்.
பல்கலைக்கழக டேவான் புடாயாவில்
மலேசிய அரசியல் அரங்கில்
உடன்பாடுகளும் முரண்பாடுகளும்
எனும் தலைப்பில்
உரையாற்றினார்.

சாத்தியக்கூறுகளின் கலை,  எண்களின்
அரசியல், நிரந்தர எதிரிகள் இல்லை, நிரந்தர நலன்கள்
மட்டுமே என்ற மலேசிய அரசியலின்
மூன்று அடிப்படைக் கூறுகளை
வழிகாட்டியாகக் கொண்ட கூட்டணி
பங்காளிகளின் அரசியல் பரிணாமம்
மற்றும் அரசியல் நிலைப்பாட்டின்
மாற்றத்தை அவரது உரை இலக்காகக்
கொண்டிருந்தது.

தேசிய ஒற்றுமை ஆலோசனைக் குழு
உறுப்பினர், மலேசிய கால்பந்து சங்க
ஆலோசனைக் குழு உறுப்பினர்,
கோலாலம்பூர் பூப்பந்து சங்கத் துணைத்
தலைவர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய
அமைப்புகளில்  பொறுப்புகளைச் சிவமுருகன் வகித்து
வருகிறார்.


Pengarang :