NATIONAL

கோழி விற்பனைக் கடையின் தரையில் தொப்புள் கொடியுடன் குழந்தை கண்டுபிடிப்பு

சுக்காய் ஜூ 6- புதிதாக பிறந்த குழந்தை ஒன்று இங்குள்ள ஜாலான் ஆயர்
பூத்தே, ஜாபோர் குபோரில் உள்ள கோழி விற்பனைக் கடை ஒன்றில்
கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

தொப்புள் கொடி அகற்றப்படாத நிலையில் உயிருடன் காணப்பட்ட அந்த
குழந்தை தரையில் கைவிடப்பட்ட நிலையில் கிடப்பதை அந்த கடையின்
உரிமையாளர் இன்று காலை 7.50 மணியளவில் கண்டதாக கெமாமான்
மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஹன்யான் ரம்லான்
கூறினார்.

அந்த குழந்தையை போலீசார் சிகிச்சைக்காக கெமாமான்
மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றதாக அவர் சொன்னார்.

அந்த குழந்தை ஆரோக்கியமாக காணப்பட்டதோடு அது பிறந்து மூன்று
அல்லது நான்கு நாட்கள் ஆகியிருக்கும் என்பது கணிக்கப்படுகிறது என்று
இங்குள்ள ஆயர் பூத்தே போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர்
கூட்டத்தில் அவர் குறிப்பிட்டார்.

இந்த குழந்தையின் பெற்றோர்களைக் கண்டு பிடிப்பதற்காக தாங்கள்
தனியார் கிளிக்குகளைத் தொடர்பு கொண்டு விபரங்களைச் சேகரித்து
வருவதாக அவர் மேலும் சொன்னார்.

புதிதாக பிரசவித்த பெண்கள் நோயாளிகளாக தங்களிடம் சிகிச்சைப் பெற
வந்திருந்தால் அது குறித்து தகவல் அளிக்கும்படி தனியார் கிளிக்குகளை
அவர் கேட்டுக் கொண்டார்.

பிரசவத்தை மறைத்தது தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 317வது
பிரிவின் கீழ் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என
அவர் மேலும் சொன்னார்.


Pengarang :