NATIONAL

கடந்த மே மாதத்தில் விமானப் பயணிகளின் போக்குவரத்து 39.1 சதவீதம் உயர்வு

கோலாலம்பூர், ஜூலை 7: 2022 மே மாதத்துடன் ஒப்பிடும்போது 2023 மே மாதத்தில்
மொத்த விமானப் பயணிகளின் போக்குவரத்து 39.1 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது
2019 இல் பதிவுசெய்யப்பட்ட அளவிற்குப் பயணிகளின் போக்குவரத்து அதிகரித்துள்ளது
என்று சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் (IATA) தெரிவித்துள்ளது.

மே மாதத்திற்கான உள்நாட்டு போக்குவரத்து (ஒரு வருடம்) கடந்த ஆண்டை விட 36.4
சதவீதம் அதிகரித்துள்ளது. மே 2023 இல் மொத்த உள்நாட்டு போக்குவரத்து 5.3
சதவீதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என அச்சங்கம் நேற்று வெளியிட்டுள்ள
அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தொற்றுநோய்க்கு முன் இருந்த உள்நாட்டு போக்குவரத்து நிலைகளைத் தாண்டியதில்
இது தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாகும்.

“மே மாதத்தில் சராசரியாக 81.8 சதவீதப் பயணிகள் போக்குவரத்து விமானத்தில்
நிரம்பியுள்ளது.

"உள்நாட்டு சந்தை தொற்றுநோய்க்கு முந்தைய இருந்த வளர்ச்சியை மீண்டும் பதிவு
செய்தது. வடக்கு அரைக்கோளத்தில் கோடைகாலக் பயணப் பருவத்தில், சர்வதேச
விமானங்கள் தொற்றுநோய்க்கு முந்தைய காலங்களில் 90.8 சதவீதத்தை எட்டியுள்ளன,
”என்று அச்சங்க இயக்குநர் ஜெனரல் வில்லி வால்ஷ் கூறினார்.

இதற்கிடையில், ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உள்ள விமான நிறுவனங்களால் மீண்டும்
வழிநடத்தப்பட்ட அனைத்து சந்தைகளும் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்ததன்
மூலம் சர்வதேசப் போக்குவரத்து மே 2022 உடன் ஒப்பிடுகையில் 40.9 சதவீதம்
அதிகரித்துள்ளது.

சங்கத்தின் கூற்றுப்படி, மே 2019 இல் ஒரு கிலோமீட்டருக்குப் பயணிகளின் வருவாய்
(RPK) 90.8 சதவீதத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

– பெர்னாமா


Pengarang :