SELANGOR

ஆசிட் வீசியதில் மகன் உயிர் பிழைத்த நிலையில் கணவன்-மனைவி இருவர் காயமடைந்தனர்

கோலாலம்பூர், ஜூலை 7: கடந்த ஜூலை 4-ஆம் தேதி பத்து கேவ்ஸ், கோம்பாக் எனும்
இடத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள லிஃப்டில் நுழைந்த பெண்
ஒருவர் ஆசிட் வீசியதில் மகன் உயிர் பிழைத்த நிலையில் கணவன்-மனைவி இருவரும்
காயமடைந்தனர்.

அதிகாலை 1.27 மணி அளவில் இச்சம்பவம் நடந்த பின்னர், அதனை குறித்து அதிகாலை
3.10 மணி அளவில் தனது தரப்புக்கு தகவல் கிடைத்தது என கோம்பாக் மாவட்டக்
காவல்துறையின் செயல் தலைவர், சூப்ரிண்டெண்டன் நூர் அரிஃவின் முகமட் நசீர்
கூறினார்.

பாதிக்கப்பட்டவர்கள் 60 வயதுடைய உள்ளூர் பெண் ஒருவர், அவரது 37 வயது
வெளிநாட்டு கணவர் மற்றும் அவர்களது 14 வயது மகன் என்றும் அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற செலாயாங் மருத்துவமனைக்கு அனுப்புமாறு
பொதுமக்களின் உதவியைக் கேட்டுள்ளனர். மேலும், அவர்களின் மகனுக்கு
இச்சம்பவத்தில் காயம் ஏதும் ஏற்படவில்லை, என்று நூர் அரிஃவின் ஓர் அறிக்கையில்
தெரிவித்தார்.

சிசிடிவி கேமராவில் பதிவான இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு
வைரலானது.

குற்றவியல் சட்டப் பிரிவு 324 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும்,
அவரது தரப்பு தற்போது சந்தேக நபரைத் தேடி வருவதாகவும் நூர் அரிஃவின் கூறினார்.

சம்பவத்தைப் பார்த்த அல்லது தகவல் அறிந்த பொதுமக்கள், விசாரணை அதிகாரி முகமட்
நிசார் அட்னானையாவை (013-9661892) அல்லது கோம்பாக் மாவட்டக் காவல்துறை
தலைமையகச் செயல்பாட்டு அறையை (03-61262222) தொடர்பு கொண்டு
விசாரணைக்கு உதவ முன்வருமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

– பெர்னாமா


Pengarang :