NATIONAL

சிலாங்கூரிலுள்ள 988 பள்ளிகளுக்கு வெ 2.65 கோடி வெள்ளி மானியம்

ஷா ஆலம், ஜூலை 7- சிலாங்கூர்  மாநிலத்திலுள்ள 988 பள்ளிகளுக்கு 2 கோடியே 65 லட்சம் வெள்ளியை மாநில அரசு மானியமாக வழங்கியுள்ளது.

பள்ளிகளுக்கு மானியம் வழங்கும் திட்டம்  கடந்த 2009 ஆம் ஆண்டில்  தொடங்கப்பட்டது பள்ளிகளின்மேம்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட மிகப்  பெரிய தொகை இதுவாகும்.

இங்குள்ள எம்.பி.எஸ்.ஏ. மாநாட்டு மையத்தில் இன்று நடைபெற்ற  நிகழ்வில் மந்திரி புசார் டத்தோஸ்ரீஅமிருடின் ஷாரி இந்த மானியத்தை  பள்ளி நிர்வாகப் பிரதிநிதிகளிடம்   ஒப்படைத்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய மந்திரி புசார், இந்தத் திட்டத்தின் கீழ் முதன்  முறையாக தேசியப் பள்ளிகளுக்கும் நிதி   வழங்கப்படுவதாக கூறினார்.

கடந்த 2009ஆம் ஆண்டு முதல்  இவ்வாண்டு வரை மொத்தம் 26 கோடி  வெள்ளி சிலாங்கூரில் உள்ள  பள்ளிகளுக்கு மானியமாக  வழங்கப் பட்டுள்ளதாக அவர்  தெரிவித்தார்.

பள்ளிகளில் அடிப்படை வசதிகளை தரம் உயர்த்துவது, மாணவர்களின் கல்வித் தரத்தை
மேம்படுத்துவதற்கான திட்டங்களை அமல்படுத்துவது போன்ற நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படும்
என்றார் அவர்.

இன்றைய நிகழ்வில் தமிழ், சீன, சமய,  தாபிஸ் பள்ளிகள், தேசியத் தொடக்க  மற்றும் இடைநிலைப் பள்ளிகள் மந்திரி புசாரிடமிருந்து நிதியை பெற்றன.


Pengarang :