SELANGOR

தாமான் மெலாவிஸ் திடீர் வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு

ஷா ஆலம், ஜூலை 7: கிள்ளான் தாமான் மெலாவாசை சுற்றி வாழும் சுமார் 1,000 குடும்பங்கள் எதிர்கொண்டு வரும் 20 ஆண்டுகளாக வெள்ளப் பிரச்சனை இப்பொழுது நடந்து வரும் வெள்ளத் தணிப்புத் திட்ட பணி அடுத்த ஆண்டு ஏப்ரலில் முழுமையாக நிறைவு பெறும் போது, வெள்ள இடர்பாடு முழுமையாக முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கிய வடிகால் அமைப்பை மேம்படுத்தும் திட்டம், சிலாங்கூர் அரசு வழங்கிய RM16.6 மில்லியன் ஒதுக்கீட்டிற்கு பிறகு தீவிரமாக நடந்து வருவதாக பாண்டமாறான் தொகுதி முன்னால் சட்டமன்ற உறுப்பினர் தோனி லியோங் தக் சீ கூறினார்.

தோனி லியோங் இத்திட்டத்தின் செயலாக்கம் குறித்து விளக்கினார். இத்திட்டம் தற்போது 50 சதவீத முன்னேற்றத்தை எட்டியுள்ளது. நீர் பெருக்கத்தை தடுக்க அப்பகுதியில் இருக்கும் வடிகால்களை ஆழப்படுத்துதல் மற்றும் அகலப்படுத்துதல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

“சாலையோரத்தில் உள்ள டெலிகாம் கேபிளை அகற்றுவதற்கான ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டியிருப்பதால் 10 சதவீதம் தாமதம் ஏற்பட்டாலும், இருப்பினும், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் இத்திட்டத்தை முடிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

“சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து அனுமதியை விரைவுபடுத்த முயற்சிக்கிறோம், இதனால் மேம்பாடு பணிகள் சுமூகமாக நடக்கும்,” என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

இந்த திட்டம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் உள்ளூர் மக்களின் பிரச்சனையை குறைக்கும் என்று அவர் நம்புகிறார்.

“இந்தத் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கான ஒதுக்கீட்டை அங்கீகரித்த டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“நிச்சயமாக இத்திட்டம் குடியிருப்பாளர்களை வெள்ளப் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும், எனவே இந்த திட்டம் முடியும் வரை பொறுமையாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.


Pengarang :