NATIONAL

மாநிலத் தேர்தலை முன்னிட்டு பொது மக்களுக்கான சிறப்பு போர்ட்டல் – மீடியா சிலாங்கூர்

ஷா ஆலம், ஜூலை 10: மாநிலத் தேர்தலை (பிஆர்என்) முன்னிட்டு பொதுமக்களுக்கான http://prnselangor.my  சிறப்பு போர்ட்டலை மீடியா சிலாங்கூர் எஸ்டிஎன் பிஎச்டி (எம்எஸ்எஸ்பி) அறிமுகப்படுத்தியுள்ளது.

சிலாங்கூர் மந்திரி புசார் துணை நிறுவனம் (கட்டமைப்பு) அல்லது எம்பிஐனால் முதன்முதலில் உருவாக்கப்பட்ட இந்த போர்டல், இன்று டத்தோ மந்திரி புசார் அவர்களால் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கப்பட்டது.

மாநில அரசாங்கத்தையும் மக்களையும் இணைக்கும் வகையில் பயனுள்ள தகவல் தொடர்பு அமைப்பை உருவாக்குவதில்  சிலாங்கூரின் அதிகாரபூர்வ ஊடகமான மீடியா சிலாங்கூர் பங்கு வகிக்கிறது என டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“இந்தச் சிறப்பு போர்டல் சமீபத்திய தேர்தலின் செய்திகள் மற்றும் மேம்பாடுகளை தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் தரவு மற்றும் பகுப்பாய்வு அடிப்படையில் அறிக்கையிடுவதற்கான மீடியா சிலாங்கூரின் முன்னோட்ட திட்டமாகும்” என்று அவர் கூறினார்.

மேலும், இந்நிகழ்வில் சிலாங்கூர் மாநில அரசு செயலாளர் டத்தோ ஹரிஸ் காசிம், எம்பிஐயின் தலைமை நிர்வாக அதிகாரி நோரிடா முகமட் சிடெக் மற்றும் எம்எஸ்எஸ்பியின் தலைமை நிர்வாக அதிகாரி முகமது ஃபரீப் முகமட் அஷாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேர்தல் அறிவிப்புகள், 56 தொகுதிகள் பற்றிய தகவல்கள், ஒவ்வொரு மாநிலச் சட்டசபைக்களின் புள்ளிவிவரங்கள் மற்றும் கட்சிகளின் வாக்குகள் போன்ற பல அம்சங்களை இந்த போர்டல் வழங்குகிறது.

இந்த போர்டலில் அனைத்து சிலாங்கூர் தொகுதிகளுக்கான தரவு ஒப்பீடுகளைக் காண்பிக்கும் ஒரு பகுப்பாய்வு செயல்பாடும் உள்ளது. இதில் வாக்காளர்களின் எண்ணிக்கை, வாக்களிக்கும் முறைகள் மற்றும் தேர்தல் வரலாறு போன்ற தகவல்கள் அடங்கும்.

இன்று முதல் மக்கள் இந்த போர்டலை அணுகி வாக்களிப்பதற்கான வழிகாட்டிகள் மற்றும் வாக்களிப்புச் சரிபார்ப்புகள் பற்றிய தகவல்களைப் பெறலாம்.


Pengarang :