NATIONAL

மாதாந்திர அடிப்படையில் மட்டுமே  ஊழியர் சேமநிதி சேமிப்பை திரும்பப் பெற முடியும் எனும் தகவலில் உண்மை கிடையாது – சேமநிதி வாரியம்

கோலாலம்பூர், ஜூலை 10 – ஊழியர் சேமநிதி வாரிய உறுப்பினர்களில் 55 வயதை எட்டியவர்கள் மாதாந்திர அடிப்படையில் மட்டுமே தங்கள் சேமிப்பை திரும்பப் பெற முடியும் என்று அரசாங்கம் ஒப்புக்கொண்டதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் சுவரொட்டிகளில் உண்மை கிடையாது.

ஊழியர் சேமநிதி வாரியத் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோஸ்ரீ அமீர் ஹம்சாவிடம் இத்தகவலைப் பற்றி விசாரித்ததாகவும், அந்நிறுவனம் இதற்கு முழு விளக்கத்தை அளிக்குமாறு கேட்டு கொண்டதாகவும் தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

“தகவல் தொடர்பு துறை அமைச்சராக இருக்கும் நான், அத் தகவலின் நம்பகத் தன்மையைச் சரிபார்க்க டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா வுக்கு போஸ்டரை அனுப்பினேன்.

இது சம்பந்தமாக, மக்கள் மடாணி சமூகத்தை அணுக வேண்டும். இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விஷயங்கள் பரிந்துரைக்கப் படுவதை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் ஒரு முழுமையான மற்றும் தெளிவான அறிக்கையை வெளியிட முடியும்.

“அரசாங்க கொள்கைகள் மற்றும் திட்டங்களைப் பற்றிய சமீபத்திய மற்றும் உண்மையான தகவல்களை மக்களுக்கு தொடர்ந்து வழங்க மடாணி சமூகம் சரியான தளமாகும்.

நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள மொத்தம் 1,878 மடாணி சமூகங்கள் மற்றும் பல்லின தன்னார்வ அமைப்புகள் தகவல் துறையால் நிர்வகிக்கப்படும்.


– பெர்னாமா


Pengarang :