NATIONAL

தேர்தல் பிரசாரத்தில் இன விவகாரங்களைத் தவிர்ப்பீர்- வேட்பாளர்களுக்கு நினைவுறுத்து

ஷா ஆலம், ஜூலை 10- எதிர்வரும் மாநிலத் தேர்தலில் போட்டியிடும்
வேட்பாளர்கள் பிரசாரத்தின் போது இன மற்றும் சமய விவகாரங்களை
எழுப்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

வாக்காளர்களைக் கவர்வதற்கு ஏதுவாக தூய்மையாகவும் விவேகமான
முறையிலும் பிரசார நடவடிக்கைகளில் வேட்பாளர்கள் ஈடுபட வேண்டும்
என்று கம்போங் துங்கு சட்டமன்றத்தின் நடப்பு உறுப்பினரான லிம் யீ
வேய் கூறினார்.

இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தூய்மையாகவும்
விவேகமான முறையிலும் பிரசாரத்தில் ஈடுபடுவர் என்பதோடு மக்களைக்
குழப்பும் வகையிலும் பிளவை ஏற்படத்தும் நோக்கிலும் செயல்பட
மாட்டார்கள் என எதிர்பார்க்கிறேன் என்று சிலாங்கூர் கினியிடம் அவர்
தெரிவித்தார்.

எதிர்வரும் ஆகஸ்டு மாதம் 12ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் சிறப்பான
முறையில் சேவையாற்றிய வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதன் மூலம்
மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை முறையாக நிறைவேற்றுவார்கள்
எனத் தாம் எதிர்பார்ப்பதாவும் அவர் சொன்னார்.

சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு, கெடா, கிளந்தான் மற்றும்
திராங்கானு ஆகிய மாநிலங்களில் எதிர்வரும் ஆகஸ்டு மாதம் 12ஆம் தேதி
தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த ஆறு மாநிலங்களில் எதிர்வரும் ஜூலை 29ஆம் தேதி வேட்பு மனுத்
தாக்கல் நடைபெறவுள்ள நிலையில் ஆகஸ்டு 8ஆம் தேதி முதல் கட்ட
வாக்களிப்பு நடைபெறவுள்ளது.


Pengarang :