NATIONAL

வாக்காளர்கள் தண்டிப்பர் என்பதால் புக்கிட் அந்தாராபங்சா தொகுதியை அஸ்மின் தற்காக்க மாட்டார்-அமிருடின்

ஷா ஆலம், ஜூலை 11- விரைவில்
நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலில்
தனது புக்கிட் அந்தாராபங்சா
தொகுதியைக் தற்காக்கப் போவதில்லை
என்ற சிலாங்கூர் மாநிலப் பெரிக்காத்தான்
நேஷனல் தலைவர் டத்தோஸ்ரீ முகமது
அஸ்மின் அலியின் முடிவு தொடர்பான
ஆருடம், அந்தத் தொகுதியில் தாம் தோற்றுவிடுவோமோ என்ற பயத்தின்
காரணமாக உருவானது கூறப்படுகிறது.

நேற்று மாநில நிலையிலான தேர்தல்
இயந்திரத்தை தொடக்கி வைத்து
உரையாற்றிய அஸ்மினின் முன்னாள்
ஆதரவாளரும் தற்போதைய சிலாங்கூர்
பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இந்தக்
கருத்தை வெளியிட்டுள்ளார்.

தேர்தல் நடவடிக்கை அறை மற்றும்
தேர்தல் இயந்திரத்தை தொடக்கி
வைப்பதற்காக நான் புக்கிட்
அந்தாராபங்சா தொகுதிக்குச் சென்றேன்
என்று அமிருடின் தனது டிவிட்டர் பதிவில்
கூறியுள்ளார்.

அங்குள்ள அணிக்கு வாழ்த்துக்கள்.
ஏனென்றால் போர் தொடங்குவதற்கு
முன்பே புக்கிட் அந்தாராபங்சா
வாக்காளர்கள் வழங்கிய ஆணையை
மீறிய துரோகி ஓடிவிட்டார்.

கடந்த 15வது பொதுத் தேர்தலில்
கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதி
வாக்காளர்கள் செய்ததைப் போல புக்கிட்
அந்தாராபங்சா மக்களும் இந்த
துரோகியைத் தண்டிப்பார்கள் என்பது
அவருக்கு (அஸ்மின்) தெரியும் என
அமிருடின் குறிப்பிட்டார்.

கடந்த 2020 ஆம் ஆண்டில் ஷெரட்டோன்
நகர்வின் பின்னணியில் இருந்த முக்கிய
சதிகாரர்களில் ஒருவரான அஸ்மின்,
நடப்பு தொகுதியை துறந்துவிட்டு
பாதுகாப்பான தொகுதியைத் தேடுவார்
என்ற ஆருடங்களுக்கு மத்தியில்
அமிருடின் இந்தக் கருத்தை
வெளியிட்டுள்ளார்.

கெடிலான் கட்சியின் முன்னாள் துணைத்
தலைவரான அஸ்மின், கடந்த 2018
தேர்தலில் புக்கிட் அந்தாராபங்சா
தொகுதியில் 79.6 சதவீத வாக்குகளைப்
பெற்று மகத்தான வெற்றியைப் பெற்றார்.

மலாய்க்காரர் மற்றும் மலாய்க்காரர்
அல்லாத வாக்காளர்களைச் சமமாக
உள்ளடக்கிய புக்கிட் அந்தரபங்சா போன்ற கலப்புத் தொகுதிகளில் தம்மால்
வெற்றி பெற இயலாது என்பதால் வேறு தொகுதியை அஸ்மின் நாடக்கூடும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக
உள்ள இடங்களில் அஸ்மின்
வாக்காளர்களால் ஏற்றுக்
கொள்ளப்படுவார் என்ற கருத்து நிலவி
வரும் நிலையில் அவர் தனது சொந்த
ஊரான உலு கிளாங்கில் களம் காணலாம்
என ஆருடம் கூறப்படுகிறது.


Pengarang :