NATIONAL

இரகசிய இணையதளங்கள் வழி போதைப்பொருள் விற்பனை – கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

கோலாலம்பூர், ஜூலை 11: இரகசிய இணையதளங்கள், டெலிகிராம் மற்றும் புலனம் செயலிகள் மூலம் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடும் எந்த ஒரு தரப்பினருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் (கேகேடி) ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

தேசியப் போதைப்பொருள் எதிர்ப்பு நிறுவனத்தின் (AADK) இயக்குநர் ஜெனரல் சுதேகோ அமாட் பெலோன் வெளியிட்ட செய்தியைத் தொடர்ந்து, இணையதளம் மூலம் RM18 வரை குறைந்த விலைக்கு விற்கப்படும் போதை பொருள் பற்றி ஃபஹ்மி கூறினார்.

மலேஷியன் கம்யூனிகேஷன்ஸ் அண்ட் மல்டி மீடியா கமிஷன் (எம்சிஎம்சி) மூலம் தனது தரப்பு விரிவான தகவல்களைப் பெற்ற பிறகு, ராயல் மலேசியன் காவல்துறையுடன் (பிடிஆர்எம்) இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஃபஹ்மி கூறினார்.

“ஆனால் அதே நேரத்தில், மற்ற இணையத்தளங்களும் உள்ளன என்பதையும் நான் புரிந்துகொள்கிறேன். சரியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதற்காக நான் அவற்றை குறிப்பிடவில்லை,” என்று நேற்றிரவு பெர்னாமா டிவியின் ருவாங் பிச்சாரா நிகழ்ச்சியில் விருந்தினராக பங்கேற்றப் பிறகு அவர் இவ்வாறு கூறினார்.

மேலும், சட்டவிரோதமாகச் செயல்படும் மேற்கண்ட நடவடிக்கையை எதிர்த்துப் போராடுவதற்கான முக்கியமான வழிமுறைகள் குறித்து விவாதிக்க தேசியப் போதைப்பொருள் எதிர்ப்பு நிறுவனத்துடன் இன்று ஒரு கூட்டம் நடத்தப்பட்டதாக ஃபஹ்மி கூறினார்.

– பெர்னாமா


Pengarang :