SELANGOR

கிள்ளான் மேரு தொகுதியில்  80 சதவீதத்திற்கும் அதிகமாக சாலைகள் செப்பனிடப்பட்டு சீரமைக்கப் பட்டுள்ளன 

ஷா ஆலம், ஜூலை 12: சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் (PSP) கீழ் மேரு தொகுதியில் RM1 மில்லியன் மதிப்பில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக சாலைகள் செப்பனிடப்பட்டு சீரமைக்கப் பட்டுள்ளன.

உள்ளூர் அதிகார சபையால் (PBT) நிர்வகிக்கப்படும் மலேசிய சாலை பதிவு தகவல் அமைப்பின் (Marris) நிதியில் இந்த திட்டம்  செயல்படுத்தப் பட்டது என்று தொகுதி உறுப்பினர் கூறினார்.

மேலும், இத்திட்டம் கிள்ளான்  நகராட்சி மற்றும் பொதுப்பணித் துறை (JKR) ஆகியவற்றின் ஒதுக்கீடுகளையும் உள்ளடக்கியது என முகமட் ஃபக்ருல்ராசி மொக்தாரின் தெரிவித்தார்.

“இந்த நடவடிக்கையில் நான் மிகவும் திருப்தி அடைகிறேன், மேலும் இது தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க உதவிய பிபிடி, பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட அலுவலகத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்,” என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

தொகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பிரச்சனையும் 20 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் சிலாங்கூர் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறையால் மேற்கொள்ளப்பட்ட கம்போங் புடிமானில் நீர் சேமிப்பு குளத்தை அமைப்பதன் மூலம் சமாளிக்கப்படும் என்றார்.


“அத்திட்டத்தின் வளர்ச்சி 30 சதவிகிதம் முன்னேற்றம் அடைந்துள்ள நிலையில் சாதகமான முடிவை காட்டியுள்ளது. 220 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான இரண்டாவது திட்டமும் விரைவில் மேற்கொள்ளப்படும்,” என்றார்.


Pengarang :