ANTARABANGSA

கோவிட்-19 வைரஸை ஐந்து நிமிடங்களில் கண்டறிய முடியும்

லாஸ் ஏஞ்சல்ஸ், ஜூலை 12 – அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் நிகழ்நேர மானிட்டரை உருவாக்கியுள்ளனர், இத மூலம் கோவிட்-19 வைரஸின்  மாறுபாடுகளை சுமார் ஐந்து நிமிடங்களில் கண்டறிய முடியும்.

வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஏரோசல் மாதிரி தொழில்நுட்பத்தில் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் அல்ட்ரா சென்சிட்டிவ் பயோசென்சிங் நுட்பத்தை இணைத்து அந்த சாதனத்தை உருவாக்கியுள்ளனர் என்று சின்ஹுவா கூறினார்.

மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் பொது இடங்களில், கோவிட்-19 யைக் கண்டறிய உதவுவதற்கும், இன்ஃப்ளூயன்ஸா மற்றும் சுவாச ஒத்திசைவு வைரஸ் (RSV) போன்ற பிற சுவாச வைரஸ்களைக் கண்காணிப்பதற்கும்,  இந்த சாதனத்தைப் பயன்படுத்தலாம்.

இத்தகைய தொழில்நுட்பத்தைப் பரவலாக ஏற்றுக் கொள்வது பொது சுகாதார அதிகாரிகளுக்கு விரைவான நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைச் செயல்படுத்த உதவும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– பெர்னாமா


Pengarang :