SELANGOR

பொது வசதிகளை மேம்படுத்த RM1 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது – ஶ்ரீ செத்தியா தொகுதி

ஷா ஆலம், ஜூலை 12: மசூதிகள், பள்ளி பல்நோக்கு அரங்குகள், நூலகங்கள் மற்றும் மழலையர் பள்ளிகளைச் சீரமைக்க சிலாங்கூர் பென்யாயாங் (PSP) திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட RM1 மில்லியனை ஶ்ரீ செத்தியா தொகுதி பயன்படுத்தியது.

சுபாங் பள்ளத்தாக்கு 1 மற்றும் 2 இல் சாலை அமைக்கும் பணியைச் செயல்படுத்தவும் அந்த நிதி செலவிடப்பட்டது. இது பல பயனர்களுக்கு ஆறுதல் அளித்தது என ஶ்ரீ செத்தியா தொகுதி உறுப்பினர் ஹலிமேய் அபு பகார் கூறினார்.

நூலக மறுசீரமைப்பு திட்டத்துடன் கிளானா ஜெயா காவல் நிலையத்தில் உள்ள செபாக் தக்ரா மைதனம் மற்றும் கம்போங் லிண்டுங்கன் ஃபுட்சல் மைதனம் போன்ற விளையாட்டு வசதிகளும் மேம்படுத்தப்பட்டன.

“சமூக மையத்தை சரிசெய்ய அதாவது கூரைகள், அறைகள் மற்றும் கூடாரங்களை மாற்றுவதற்கு சம்பந்தப்பட்ட குடியிருப்பாளர்கள் சங்கம் கோரிய ஒதுக்கீட்டையும் நான் அனுப்பினேன்.

“இந்த திட்டங்கள் அனைத்தும் வசதிகளை எதிர்பார்க்கும் குடியிருப்பாளர்களுக்கு நிவாரணம் அளிக்கின்றன,” என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.


சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் கீழ் சிறிய திட்டங்களை உருவாக்குவதன் மூலம் உள்ளூர் பொருளாதாரத்தை தூண்டுவதற்காகச் சிலாங்கூர் பட்ஜெட்டில் RM28 மில்லியன் ஒதுக்கப்பட்டது.


Pengarang :