SELANGOR

சிலாங்கூர் குழந்தைகள் புத்தக் கண்காட்சியில் 10 வருகையாளர்களுக்கு  அதிர்ஷ்டக் குலுக்கல் முறையில் RM500 மதிப்பிலான ரொக்கம் வழங்கப்படும்

ஷா ஆலம், ஜூலை 13: இம்மாத இறுதியில் நடைபெறும் சிலாங்கூர் குழந்தைகள் புத்தக் கண்காட்சியில் ஒவ்வொரு நாளும் 10 வருகையாளர்கள் RM500 ரொக்கத்தை அதிர்ஷ்டக் குலுக்கல் முறையில் வெற்றிபெற வாய்ப்பு உள்ளது.

சிலாங்கூர் பொது நூலகக் கழகம் (PPAS) இங்குள்ள பி.கே.என்.எஸ் (PKNS) வளாகத்தில் ஜூலை 27 முதல் 30 வரை குழந்தைகள் புத்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. இக்கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் என்றும் இந்நிகழ்வை மேலும் உற்சாகப்படுத்த அதிர்ஷ்டக் குழுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது.

“மேலும், கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் மற்றும் பல்வேறு நடவடிக்கைகள் அங்கு நடைபெறும். திரளாக வாருங்கள்” என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 30 அன்று, வாசிப்பு கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக முதல் முறையாகக் குழந்தைகள் புத்தகக் கண்காட்சியை மாநில அரசு நடத்துகிறது என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிஅறிவித்தார்.

கடந்த 16 ஆண்டுகளாக, மாநில அரசு சிலாங்கூர் புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகிறது மற்றும் 200,000 பார்வையாளர்களின் வருகையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Pengarang :