ANTARABANGSA

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் சிங்கை அமைச்சர் ஈஸ்வரன் மீது விசாரணை

சிங்கப்பூர், ஜூலை 13 – ஊழலற்ற
அரசாங்கம் என்று பெருமைப்படும்
சிங்கப்பூரில் அந்நாட்டு போக்குவரத்து
அமைச்சருக்கு எதிரான ஊழல் புகார்
தொடர்பில் சிங்கப்பூரின் ஊழல் தடுப்பு
நிறுவனம் விசாரணையைத்
தொடங்கியுள்ளது.

ஒரு வழக்கில் உதவியாக இருக்கும்
அமைச்சர் எஸ். ஈஸ்வரனை தாங்கள்
நேர்காணல் செய்துள்ளதாக ஊழல் விசாரணை
மையம் கூறியது. எனினும், இதன்
தொடர்பில் அது மேலதிக விவரங்களை
வழங்கவில்லை.

இந்த விசாரணை முடியும் வரை ஓய்வில்
செல்லுமாறு அமைச்சர் ஈஸ்வரனுக்குத்
தாம் அறிவுறுத்தியுள்ளதாகப் பிரதமர் லீ
சியென் லூங் கடந்த புதன்கிழமை
தெரிவித்தார்.

ஊழல் தடுப்பு மையம் கடந்த ஜூலை 11
ஆம் தேதி விசாரணையைத்
தொடங்கியதாக அவரது அலுவலகம்
வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் குறித்து கருத்து
பெற ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம்
மேற்கொண்ட முயற்சிக்கு ஈஸ்வரன்
உடனடியாக பதிலளிக்கவில்லை . 61
வயதான அவர் 2006 இல் லீயின்
அமைச்சரவையில் இளைய அமைச்சராகச்
சேர்ந்தார். வர்த்தகம் மற்றும் தகவல்
தொடர்பு துறை அமைச்சராக இருந்த
அவர், கடந்த 2021 மே மாதம்
போக்குவரத்து அமைச்சராக ஆனார்.

ஊழலைத் தடுப்பதற்காக அரசு
ஊழியர்களுக்கு நல்ல ஊதியம்
வழங்கப்படும் சிங்கப்பூரில் அமைச்சர்கள்
சம்பந்தப்பட்ட ஊழல் விசாரணைகள்
நடப்பது மிகவும் அரிது. பல
அமைச்சர்களின் ஆண்டு சம்பளம் 10
லட்சம் சிங்கப்பூர் டாலருக்கும் (RM34.8 லட்சம்
வெள்ளி) அதிகமாகும்.


Pengarang :