NATIONAL

சிலாங்கூர் மக்கள் இனவாதக் கட்சிகளை நிராகரித்து, நடப்பு அரசாங்கத்தை நிலை நிறுத்த வேண்டும்

கோல சிலாங்கூர், ஜூலை 13- நாடு அல்லது மாநிலத்தை வழி நடத்துவதை விட சமய உணவுர்களைத் தூண்டுவதில் குறியாக இருக்கும் குறுகிய இனவாதப் போக்குடைய கட்சிகளை நிராகரிப்பதில் மக்கள் உறுதியுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜசெக வின் கைப்பாவையாக ஒற்றுமை அரசாங்கம் செயல்படுவதாக கூறுவதன் மூலம் எதிர்க்கட்சிகள் இத்தகைய இன உணர்வுகளை சதா தூண்டி வருகின்றன என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் லோக்மான் நோர் ஆடாம் கூறினார்.

தாங்கள் ஜசெகவின் கைப்பாவையாக செயல்படுவதாகக் கூறப்படுவதை நிராகரித்த அவர், அந்தக் கட்சி அரசியலமைப்புச் சட்டத்தை கட்டிக்காப்பதில் மலாய் சமூகத்தின் சிறப்புரிமையை மதிப்பதிலும் முன்னுரிமை அளித்து வருகிறது என்றார்.

ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் இஸ்லாத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது சமயம் புறக்கணிக்கப்படுவதாக பிரச்சாரம் செய்வதன் மூலம் பெரிக்காத்தான் நேஷனல் இன உணர்வுகளுடன் விளையாடி வருகிறது.

நான் கேட்கிறேன்?

எத்தனை முஸ்லிம்களை ஜசெக மத மாற்றம் செய்துள்ளது? எதுவும் கிடையாது என அவர் குறிப்பிட்டார்.

எத்தனை தாபிஷ் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன? எதுவும் இல்லை.

அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சமூக ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள அம்சங்களை தாங்கள் மதிப்பதாக ஜசெக எப்போதும் கூறி வந்துள்ளது என்றார் அவர்.

நேற்றிரவு இங்கு நடைபெற்ற பெர்மாத்தாங் தொகுதி நிலையிலான மடாணி பயணத் தொடர் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்தாண்டு முதலீடுகளை ஈர்ப்பதில் சிலாங்கூர் மற்ற மாநிலங்களை விட பல மடங்கு சிறப்பாகச் செயல் பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.


Pengarang :