SELANGOR

வெள்ளையடிக்கும் திட்டம் அடுத்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிப்பு – அம்பாங் ஜெயா நகராண்மை கழகம்

அம்பாங் ஜெயா, ஜூலை 14: அனுமதியின்றி கட்டிடங்களை மேம்படுத்துதல் அல்லது புதுப்பித்தல் தொடர்பான பிரச்சனையை சமாளிக்க  அதை  அடையாளப்படுத்த  அதன்மீது   வெள்ளை அடிக்கும் திட்டம்    கடந்த ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்தது, இத்திட்டம் அடுத்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

இந்த கால நீட்டிப்பு அதிகமான  சொத்து உரிமையாளர்களுக்கு இத்திட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என அம்பாங் ஜெயா நகராண்மை கழக கட்டிடம் மற்றும் கட்டிடக்கலை துறை தலைவர் அஹ்மத் அல்ஹைரி முகமட் யூசுப் கூறினார்.

“அம்பாங் ஜெயா நகராண்மை கழகக் (MPAJ) குடியிருப்பு கட்டிட ஒப்புதல் திட்டம் எதிர்வரும் ஜூலை 1 முதல் டிசம்பர் 31, 2024 வரை நீட்டிக்கப்படும்.

“இது கட்டிடத் திட்ட அனுமதி பெறுவதற்கு வெள்ளையடிக்கும் திட்டத்தில் பங்கேற்க அதிக வீட்டு உரிமையாளர்களுக்கு வாய்ப்பாக அமையும். இதன் மூலம், வழிகாட்டுதல்களுக்கு இணங்காத கட்டுமானம் மற்றும் புதுப்பித்தல் சிக்கல்களைத் தீர்க்க முடியும்” என்று அவர் கூறினார்.

1 ஜூலை 2021 முதல் 30 ஜூன் 2023 வரை செயல்படுத்தப்பட்ட வெள்ளையடிக்கும் திட்டத்தில் பங்கேற்க அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்திற்கு 150க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்ததாக அவர் விளக்கினார்.

“அம்பாங் ஜெயாவில் உள்ள அனைத்து குடிமக்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் அழைக்கிறது, ஏனெனில் இத்திட்டம் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.

“இத்திட்டம் அனைத்து கட்டுமானங்களும் அம்பாங் ஜெயா நகராண்மை கழகத்தின் ஒப்புதல் மற்றும் இணக்க சான்றிதழைப் (சிசிசி) பெறுவதை உறுதி செய்வதோடு, வாங்குதல் மற்றும் விற்கும் நடவடிக்கை, வங்கி பிணையம், காப்பீட்டு கோரிக்கைகள் மற்றும் பலவற்றை எளிதாக்குகிறது,” என்று அவர் கூறினார்.

இத்திட்டத்தில் பங்கேற்க விருப்பம் உள்ளோர் அம்பாங் ஜெயா நகராண்மை கழகக் கட்டிடம் மற்றும் கட்டிடக்கலை துறையை 03-42757009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.


Pengarang :