SELANGOR

தொழில் முனைவோர் பாதுகாப்பு வட்டத்திலிருந்து வெளியேறி வெளி சந்தைகளில் துணிந்து ஊடுருவ வேண்டும்- அமிருடின் வலியுறுத்து

ஷா ஆலம், ஜூலை 14- மாநிலத்தில் உள்ள
தொழில்முனைவோர் பாதுகாப்பான
வட்டத்திலிருந்து வெளியேறி சர்வதேச
அளவில் தங்கள் வணிகத்தை
விரிவுபடுத்துவதற்கான புதிய
வாய்ப்புகளைத் தைரியமாக ஆராய
வேண்டும் என்று மந்திரி புசார்
வலியுறுத்தியுள்ளார்.

தொழில்முனைவோருக்கு உதவ பல்வேறு
முயற்சிகளை மாநில அரசு எடுத்தாலும் தொழில்நுட்பம் மற்றும்
புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கேற்ப புதிய
வாய்ப்புகளை விரைவாகப் பயன்படுத்திக்
கொள்வதில் அவர்கள் முனைப்பு காட்ட
வேண்டும் என்று டத்தோஸ்ரீ அமிருடின்
ஷாரி கூறினார் .

தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க
வளர்ச்சிக்கு ஏற்ற போட்டித் தன்மையால்
தற்போதைய வர்த்தகம் இயக்கப்படுகிறது
என்பதை புதிய வர்த்தகர்கள் உணர
வேண்டும். தொழில்முனைவோர்
வணிகத்தில் உள்ள வாய்ப்புகளை
கண்டறிவார்கள் என்று நம்புகிறேன் என
அவர் குறிப்பிட்டார்.

வணிகர்கள் சர்வதேசச் சந்தையைக் குறிப்பாக,
தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் ஊடுருவுவது ஆராய்வது
பற்றி சிந்திக்க வேண்டும். சிலாங்கூர்
தொழில்முனைவோருக்குப் பல்வேறு
திட்டங்களையும் வழிகாட்டுதலையும்
சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக்
கழகம் (பி.கே.என்.எஸ்.) வழங்குகிறது.
ஆனால் அவர்கள் கிடைக்கும் வாய்ப்பில்
திருப்தி கொள்வதைக் காண நான்
விரும்பவில்லை என்று அவர் சொன்னார்.

இங்குள்ள ராஜா மூட மண்டபத்தில் நேற்று
நடைபெற்ற சிலாங்கூர்
தொழில்முனைவோர் சங்கத்தின் பிஸ்மாட்ச்
மெகா 2.0 நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர்
இவ்வாறு கூறினார்.

இதனிடையே, தொழில்முனைவோர் தங்கள்
வணிகங்களை விரிவாக்கம் செய்வதில்
உதவ  தனது தரப்பு தயாராக உள்ளது என்று
பி.கே.என்.எஸ். தலைமை நிர்வாக அதிகாரி
டத்தோ மாமுட் அப்பாஸ் தெரிவித்தார்.


Pengarang :