SELANGOR

பி.கே.என்.எஸ். வழிகாட்டல் பெற்றவர்களின் வர்த்தகம் 75% அதிகரிப்பு- அனைத்துலகச் சந்தைகளிலும் ஊடுருவ வாய்ப்பு

ஷா ஆலம், ஜூலை 14- சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகத்தின்
(பி.கே.என்.எஸ்.) தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பிரிவின்
வழிகாட்டலைப் பெற்ற வர்த்தகர்கள் தங்கள் வர்த்தக நடவடிக்கைளை 75
விழுக்காடு வரை அதிகரிப்பதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளது.

பி.கே.என்.எஸ். தொழில்முனைவோர் பயிற்சியில் கடந்த 2019ஆம் ஆண்டு
பங்கேற்பதற்குக் கிடைத்த வாய்ப்பு தனது வர்த்தக பாணியையே
மாற்றியதாகக் கியுடோட் கேஃபே நிறுவனத்தின் நிறுவனர் ஜெஹான் ஜாபர்
கூறினார்.

இந்த பயிற்சியின் வாயிலாகத் தனது வர்த்தகம் 75 விழுக்காடு வரை
உயர்வு கண்டதோடு தனது தயாரிப்பு பொருள்களை அனைத்துலகச்
சந்தையிலும் பிரபலப்படுத்துவதற்குரிய வாய்ப்பு கிட்டியதாக அவர்
சொன்னார்.

நான் பி.கே.என்.எஸ். தொழில் முனைவோராக கடந்த 2019 முதல் இருந்து
வருகிறேன். உணவு விற்பனைத் துறையில் சிறிதும் அனுபவம் இல்லாத
என்னை இன்று ஆற்றல்மிக்க தொழில்முனைவோராக அது
உருவாக்கியுள்ளது. வர்த்தகத்தின் அடிப்படைக் கூறுகள், பயிற்சி மாதிரிகள்
மற்றும் சந்தை நுணுக்கங்களை இங்கு நான் கற்றுக் கொண்டேன் என
அவர் தெரிவித்தார்.

இதனிடையே, பி.கே.என்.எஸ். வழங்கிய பயிற்சிகள் மற்றும் வழிகாட்டல்
மூலம் தனது அழகு சாதனப் பொருள்கள் அனைத்துலகச் சந்தையில்
ஊடுருவுவதற்குரிய வாய்ப்பு கிட்டியதாக ஐ சந்தேக்கியூ நிறுவனத்தின்
தலைமைச் செயல்முறை அதிகாரி நோர்லைய்லி அப்துல் ராவுப் கூறினார்.

பி.கே.என்.எஸ். பிஸ்னஸ் கிளப்பில் சேர்ந்தவுடன் வர்த்தகத்தை
அனைத்துலக நிலைக்குக் குறிப்பாக இந்னோனேசியாவுக்கு
விரிவுபடுத்துவதற்குரிய வாய்ப்பு கிட்டியது.

அதோடு மட்டுமின்றி ஆறு மாதங்களில் வர்த்தக மதிப்பும் 55 விழுக்காடு
உயர்வு கண்டது என அவர் சொன்னார்.


Pengarang :