NATIONAL

வங்காளதேசத் தொழிலாளியை கொலை செய்ததாக நம்பப்படும் மியான்மர் தொழிலாளி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்

கோலாலம்பூர், ஜூலை 14 – 2015 ஆம் ஆண்டு வங்காளதேசச் சலவைத் தொழிலாளியைக் கொலை செய்ததாக நம்பப்படும் மியான்மர் தொழிலாளி ஒருவர் எட்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பின் அம்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டார்.

 

37 வயதான அஜிப் காம், மாஜிஸ்திரேட் நோர்மைசன் ரஹீம் முன் மலாய் மொழியில் தன் மீதான குற்றச்சாட்டு வாசிக்கப் பட்டபோது புரிந்தது என்று தலையசைத்தார்.

 

இந்த வழக்கு உயர்நீதி மன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருவதால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இடமிருந்து எந்த மனுவும் பதிவு செய்யப்படவில்லை.

 

அந்த நபர் செப்டம்பர் 5, 2015 அன்று இரவு 8.30 மணியளவில் ஜாலான் 2/2, பாண்டன் சாஹாயாவில் வங்கதேச இளைஞரான உஸ்சல் அலி (28) என்பவருக்கு மரணம் ஏற்படக் காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

 

அவர் மீது குற்றவியல் சட்டப்பிரிவு 302-ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் அல்லது 40 ஆண்டுகள் மேல் போகாமல் சிறை தண்டனை விதிக்கப்படும். அதுமட்டுமில்லாமல், குறைந்தபட்சம் 12 பிரம்பு அடிகளும் விதிக்கப்படும்.

 

இந்த வழக்கை மீண்டும் அக்டோபர் 3ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

 

குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகாத நிலையில், அரசுத் தரப்பில் துணை அரசு வழக்கறிஞர் நூருல் அமீரா சாம் கமருடின் ஆஜரானார்.

 

ஜூன் 23ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில் பினாங்கில் உள்ள புக்கிட் மெர்தாஜாமில் நடத்திய சோதனை நடவடிக்கையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக அம்பாங் மாவட்டக் காவல்துறைத் தலைவர், ஏசிபி முகமட் அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

 

– பெர்னாமா


Pengarang :