NATIONAL

மலாய் சமூகத்திற்கும் இஸ்லாத்திற்கும் துரோகமிழைக்கப் பிரதமர் பதவியை நான் பயன்படுத்தியதில்லை- அன்வார்

கப்பளா பாத்தாஸ், ஜூலை 17 –
மலாய்க்காரர்களுக்கும் இஸ்லாமிய
சமயத்திற்கும் துரோகம் செய்ய பிரதமர்
என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தியதில்லை
என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
கூறினார்.

பினாங்கு முதலமைச்சராக செள கூன்
இயோவை ஆதரிப்பதால் தான்
மலாய்க்காரர்களையும் இஸ்லாத்தையும்
ஒருபோதும் சிறுமைப்படுத்தவில்லை என்றும் அவர்
சொன்னார்.

மலாய்க்காரர்களுக்கும் இஸ்லாத்துக்கும்
என்ன துரோகம் செய்தேன் என்று எட்டு
மாதங்களாக நாடாளுமன்றத்தில் கேட்டுக்
கொண்டிருக்கிறேன். நான் பினாங்கு
முதலமைச்சரை ஆதரிப்பதாலா?
உண்மையைச் சொன்னால், நான் துரோகம்
செய்யவில்லை. அரசியல் யதார்த்தத்தை
ஏற்றுக்கொள்கிறேன். நான் நாட்டில்
அமைதியை விரும்புகிறேன்.

மற்ற மாநிலங்களிலும்
மலாய்க்காரர்கள் மற்றும் முஸ்லீம்கள்
மாட்சிமை தங்கிய பேரரசர், நிதி அமைச்சர்,
தலைமை நீதிபதி, சட்டத் துறைத் தலைவர்,
பேங்க் நெகாரா கவர்னர் போன்ற மிக முக்கியமான பதவிகளை வகிக்கிறார்கள்
என்று அவர் தெரிவித்தார்.

நேற்று இங்கு மலேசியா மடாணி
கருத்தரங்கை முடித்து வைத்து
உயையாற்றுகையில் அவர் இவ்வாறு
குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் முதலமைச்சர் செள, துணை
முதல்வர் 1 டத்தோ ஜாகியுதீன் அப்துல்
ரஹ்மான், துணை முதல்வர் II பேராசிரியர்
டாக்டர் பி ராமசாமி மற்றும் பினாங்கு
மாநிலச் செயலாளர் டத்தோ முகமட் சாயுதி
பாக்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நான் பல ஆண்டுகளாக ஏற்ற தாழ்வுகளை
அனுபவித்தேன். நான் போதுமான அளவு
செய்யவில்லை என்று தோன்றினால், அதை சரியான
நேரத்தில் சரிசெய்வேன். அன்வார்
பிரதமரானால் எல்லாம் சரியாகிவிடும்
என்று நான் சொல்லவில்லை. பிரச்சனைகள்
இருக்கத்தான் செய்யும்.

ஆனால் நாட்டின் செல்வத்தைத் திருடுவது
மற்றும் நமது நாட்டில் ஊழலை செழிக்க
வைப்பது போன்ற விஷயங்களில் நான்
சமரசம் செய்ய தயாராக இல்லை என்று
அவர் கூறினார்.


Pengarang :