SELANGOR

மலிவு விற்பனை திட்டம் எதிர்காலத்திலும் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் – சுபாங் ஜெயா குடியிருப்பாளர்கள் கோரிக்கை

சுபாங் ஜெயா, ஜூலை 17: மலிவு விற்பனை திட்டம் எதிர்காலத்திலும் தொடர்ந்து நடத்தப்படும் என்று சுபாங் ஜெயா நாடாளுமன்றத்தின் குடியிருப்பாளர்கள் நம்புகிறார்கள். ஏனெனில் இந்த திட்டம் சமையலறை பொருட்களை வாங்குவதற்கான செலவைச் சேமிக்க மிகவும் உதவியாக இருக்கிறது.

மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் இத்திட்டத்தை ஏற்பாடு செய்ததற்காகக் குடியிருப்பாளர்கள் மாநில அரசுக்கு நன்றி தெரிவித்ததாகச் சுபாங் ஜெயா மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் மிஷால் இங் கூறினார். இத்திட்டத்திற்கான மக்களின் ஆதரவு  மிகவும் ஊக்கமளிக்கும் வகையில் இருப்பதை நான் கண்டேன். மேலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்களின் புகார்களையும் கேட்டேன் என்றார்.

சுபாங் ஜெயா நாடாளுமன்றத்தில் இத்திட்டத்தை ஆய்வு செய்தபோது,

“தற்போதுள்ள விற்பனைப் பொருட்களுடன், சீனி மற்றும் மாவு போன்ற பிற அடிப்படைப் பொருட்களையும் சேர்த்து கொள்ள வேண்டும் என்று குடியிருப்பாளர்கள் கேட்டு கொண்டனர்.

நான் மீண்டும் அப்பகுதியில் உள்ள மக்களின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டால் இத்திட்டத்தில் மேலும், பல வகையான பொருட்களை சேர்ப்பது போன்ற குடியிருப்பாளர்களின் கோரிக்கைகளை முன்வைப்பேன் என்று அவர் கூறினார்.


Pengarang :