NATIONAL

சபா சரவா மாநிலத்தினர் உள்பட 89,000 பேருக்குச் சிலாங்கூரில் வேலை வாய்ப்பு உருவாக்கம்

ஷா ஆலம், ஜூலை 17- சிலாங்கூர் மாநில அரசு கடந்த ஐந்தாண்டுகளில்
89,000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இதன் மூலம்
மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி சபா மற்றும் சரவாவிலிருந்து
இங்கு குடிபெயர்ந்தவர்களும் பயன் பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளது.

வெளி மாநிலங்களிலிருந்து இங்கு வந்து வேலை செய்வோர் உள்பட
சிலாங்கூரிலுள்ள யாரும் புறக்கணிக்கப்படாமலிருப்பதை மாநில அரசு
தொடர்ந்து உறுதி செய்து வரும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி கூறினார்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிலாங்கூர் 25.5 விழுக்காட்டுப்
பங்களிப்பை வழங்கியதற்கு இங்குள்ள சபா மற்றும் சரவா மாநிலத்தைச்
சேர்ந்தவர்கள் உள்பட அனைத்து சிலாங்கூர்வாசிகளும் வழங்கிய கடும்
உழைப்பே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாநிலம் எவ்வாறு இயங்குகிறது என்பதை நாம் விரிவான
கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். ஆரம்ப காலந்தொட்டே சிலாங்கூர்
அனைவரின் கவனத்திற்குரிய இடமாக இருந்து வந்துள்ளது. மக்களின்
வலுவான ஒற்றுமை உணர்வே நமது சக்திக்கான மூலகர்த்தாவாகவும்
விளங்கி வருகிறது என்றார் அவர்.

நேற்று இங்குள்ள தாமான் ஸ்ரீ மூடாவில் நடைபெற்ற 2023ஆம்
ஆண்டிற்கான சிலாங்கூர் காஅமத்தான் நிகழ்வில் உரையாற்றிய போது
அவர் இதனைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் சபா மாநில பாரிசான்
நேஷனல் தலைவர் டத்தோ ஸ்ரீ புங் மொக்தார் ராடினும் கலந்து
கொண்டார்.

மாநிலத் தேர்தலுக்குப் பின்னரும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள
உதவும் பட்சத்தில் குறிப்பிட்ட சில நிகழ்வுகளை நடத்துவதற்கு

தேவையான வசதிகளை செய்து தருவது தொடர்பான சபாவாசிகளின்
கோரிக்கையை மாநில அரசு பரிசீலிக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.


Pengarang :