NATIONAL

மாநிலத் தேர்தலை முன்னிட்டு மீடியா சிலாங்கூரின் சிறப்பு போர்ட்டல்

ஷா ஆலம், ஜூலை 17: ஒவ்வொரு தொகுதியின் நிகழ்நேர முடிவுகள் உட்பட மாநில தேர்தல்களின் முன்னேற்றத்தைத் தெரியப்படுத்த மீடியா சிலாங்கூர் ஒரு சிறப்பு போர்ட்டலை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த சிறப்பு போர்ட்டல் 56 தொகுதிக்கான இடங்கள், புள்ளிவிவரங்கள் மற்றும் கட்சி அறிக்கைகள் உள்ளிட்ட பிற அம்சங்களையும் கொண்டுள்ளது.

மேலும், பதவியில் இருப்பவர்கள், வாக்காளர்களின் எண்ணிக்கை, வாக்களிக்கும் முறைகள் மற்றும் தேர்தல் வரலாறு உள்ளிட்ட அனைத்து இடங்களின் தரவு ஒப்பீடுகளைக் காண்பிக்கும் ஒரு பகுப்பாய்வு செயல்பாடும் இதில் உள்ளது.

இந்த போர்ட்டல் சிலாங்கூர் மந்திரி புசார் (கட்டமைப்பு) துணை நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது அதாவது ஜூலை 10 அன்று மீடியா சிலாங்கூர் அலுவலகத்தில் டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்களால் தொடங்கப்பட்டது.

“இந்த சிறப்பு போர்ட்டல் மாநிலத் தேர்தலின் சமீபத்திய செய்திகள் மற்றும் முன்னேற்றங்களை தெரிவிப்பது மட்டுமல்லாமல், தரவு மற்றும் பகுப்பாய்வுகளின் அடிப்படையில் அறிக்கையிடுவதற்கான ஒரு முன்னோடி திட்டமாகும்” என்று அவர் கூறினார்.

இந்த சிறப்பு போர்ட்டலை ஜூலை 10 முதல் பயன்படுத்தலாம். மேலும் இதில் பொதுமக்கள் வாக்களிப்பதற்கான வழிகாட்டுதல்கள் பற்றிய தகவல்களைக் கண்டறிய முடியும்.


Pengarang :