NATIONAL

மாநிலத் தேர்தலில் அனைத்து வாக்களிப்பு இடங்களிலும்  தீயணைப்பு பாதுகாப்பு உபகரணங்களும் நல்ல நிலையில் உள்ளன

கோலாலம்பூர், ஜூலை 17: எதிர்வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் (பிஆர்என்) இடம்பெற்றுள்ள 6 மாநிலங்களில் உள்ள வேட்பாளர் நியமன மையங்கள், வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள அனைத்து தீயணைப்பு பாதுகாப்பு உபகரணங்களும் நல்ல நிலையில் உள்ளன.

 

அனைத்து நியமன மையங்களும், வாக்குச்சாவடி மையங்களும், வாக்கு எண்ணிக்கை மையங்களும் ஆய்வு செய்யப்பட்டு, உயர்மட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக மலேசியத் தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை பிரிவு இயக்குநர் டத்தோ அகமது இஸ்ராம் ஒஸ்மான் தெரிவித்தார்.

 

“மலேசியத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு (JBPM), தீ பாதுகாப்புப் பிரிவு மற்றும் தீ செயல்பாட்டுப் பிரிவு ஆகிய இரண்டு முக்கிய பிரிவுகள் (தேர்தலில்) உள்ளன.

 

வேட்பாளர் நியமனம், வாக்களிப்பு மற்றும் வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிப்பதோடு, தேர்தலின் போது அவசர அழைப்பு வந்தால் அதற்கும் நாங்கள் முன்னுரிமை அளிப்போம்,” என்று அவர் கூறினார்.

 

மலேசியச் சர்வதேச வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் (MITEC) இன்று நடைபெற்ற மலேசியத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தீ பற்றிய பாதுகாப்பு கருத்தரங்கில் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

 

இந்த தேர்தல் உடன் தொடர்புடைய மாநில மலேசியத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைகளின் இயக்குநர்களையும் ஒரு விளக்க அமர்வுக்குத் தேர்தல் ஆணையம் (SPR அழைத்துள்ளது.

 

“மலேசியத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் கண்காணிப்பு பிரிவு மற்றும் மாநிலத்தில் உள்ள தீயணைப்பு நிலைங்களும் இந்த தேர்தலின் போது எந்த சூழ்நிலையும் எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருக்கும்” என்று அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :