NATIONAL

3ஆர் விவகாரங்களைக் கையாளப் புதியச் சட்டம்-வெள்ளியன்று விவாதிக்கப்படும்

கிள்ளான், ஜூலை 18- இனம், சமயம் மற்றும் அரச அமைப்பை
உள்ளடக்கிய 3ஆர் விவகாரங்கள் தொடர்பான நடப்புச் சட்டங்களை
மதிப்பீடு செய்வதற்கும் புதிய சட்டங்களை உருவாக்குவதற்கான
அவசியத்தை ஆராய்வதற்கும் அரசாங்கம் எதிர்வரும் வெள்ளியன்று
சம்பந்தப்பட்டத் தரப்பினருடன் விவாதிக்கவுள்ளது.

இந்த கலந்துரையாடல் கோலாலம்பூரில் உள்ள ஆசிய அனைத்துலக
நடுவர் மையத்தில் நடைபெறும் என்று பிரதமர் துறை அமைச்சர் ( சட்டம்
மற்றும் நீதித்துறை மறுசீரமைப்பு) டத்தோஸ்ரீ அஸாலினா ஓத்மான் சைட்
கூறினார்.

இந்த கலந்துரையாடலில் வழக்கறிஞர் மன்றம், நிபுணத்துவ அமைப்புகள்,
அமலாக்க நிறுவனங்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அரசு சாரா
இயக்கங்கள் ஆகியவற்றின் பிரநிதிகள் இடம் பெறுவர் என்ற அவர்
சொன்னார்.

இந்த சந்திப்பின் போது நாங்கள் 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும்
பல்லுடகச் சட்டம் மற்றும் 1948ஆம் ஆண்டு நிந்தனைச் சட்டம் ஆகியவை
குறித்து ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறோம். 3 ஆர் விவகாரங்களைக்
கையாள்வதற்கு இந்த சட்டங்கள் போதுமானவையா என்பது குறித்து
இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும், காரணம், நடப்புச் சட்டங்களின் கீழ் 3ஆர்
தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகள் பொரும்பாலும் கிரிமினல்
குற்றங்கள் சார்ந்தவையாக உள்ளன என்று அவர் தெரிவித்தார்.

பல்லின மற்றும் பல சமயங்களை பல நாடுகள் கொண்டுள்ளதோடு அவை
இதற்கென சிறப்பு சட்டங்களையும் வகுத்துள்ளன. இந்தோனேசியா மற்றும்
ஆஸ்திரேலியா போன்ற நாடுகளை இதற்கு உதாரணம் கூறலாம் என்றார்
அவர்.


Pengarang :