SELANGOR

சிலாங்கூர் மாநில நிலையிலான மடாணி வேளாண் திட்டத்தை பிரதமர் தொடக்கி வைத்தார்

சபாக் பெர்ணம், ஜுலை 18-சிலாங்கூர்
மாநில நிலையிலான செந்தோஹான்
அக்ரோ மடாணி விவசாயத் திட்டத்தை
பிரதமர் இன்று சிகிஞ்சானில் உள்ள
எம்செகின் வோண்டர்லேண்டில் தொடங்கி
வைத்தார்.

விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு உதவும்
நோக்கில் தொடங்கப்பட்ட இத்திட்டம்,
குடியிருப்பாளர்கள் குறைந்த விலையில்
உணவுப் பொருட்களை எளிதாகப் பெற
உதவும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இந்தத் திட்டம் மீனவர்களுக்கும்
விவசாயிகளுக்கும் உதவும் என்று
நம்புகிறேன். இது மடாணி முயற்சிகளின்
ஒரு பகுதியாகும் என்று அவர் நிகழ்ச்சியில்
உரையாற்றியபோது தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அன்வார் அக்ரோ வங்கியின்
மடாணி ஹிஜ்ரா சேமிப்பு நிதியிலிருந்து 20
சூராவ் மற்றும் பள்ளிவாசல்களுக்கு 100,000
வெள்ளி நிதியுதவி அளித்ததோடு 6,511
நெல் விவசாயிகளுக்கு 39 லட்சம்
வெள்ளியை சிறப்பு நன்கொடையாகவும்
வழங்கினார்.

இது தவிர, 275,000 வெள்ளி மதிப்பிலான
மீன்பிடி உபகரணங்களுக்கான உதவியையும், 73 லட்சம் வெள்ளி
மீனவர்களுக்கான வாழ்க்கைச் செலவின
உதவியையும் அவர் இந்நிகழ்வில்
வழங்கினார்.

முன்னதாக, இன்று காலை 10.00
மணியளவில் இந்நிகழ்வுக்கு வந்த பிரதமரை
விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு
அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு மற்றும்
மத்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
ஆகியோர் வரவேற்றனர்.


Pengarang :