SELANGOR

கிராமப்புறத் தொழில் முனைவோர்களின் மினி கார்னிவலுக்கு RM28 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு

சபாக் பெர்ணம், ஜூலை 23: நேற்று சுங்கை புசார் மைதானத்தில் நடைபெற்ற கிராமப்புறத் தொழில் முனைவோர்களின் மினி கார்னிவல் (KUD) நிகழ்ச்சிக்காக கிராமப்புற மற்றும் பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் (KKDW) RM28 மில்லியனுக்கும் அதிகமான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

அமைச்சின் கீழ் உள்ள பல்வேறு நிறுவனங்கள் மூலம் 3,059 பெறுநர்கள் மற்றும் உள்ளூர் தொழில் முனைவோருக்கு உதவி மற்றும் நிதி வடிவில் ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டன.

அவை மக்கள் அறக்கட்டளை கவுன்சில் (மாரா) (22.4 மில்லியன்), ரப்பர் தொழில்துறை சிறு உரிமையாளர் மேம்பாட்டு ஆணையம் அல்லது ரிஸ்தா (RM3 மில்லியன்) மற்றும் ஒராங் அஸ்லி மேம்பாட்டுத் துறை அல்லது ஜகோவா (RM900,000) ஆகும்.

இந்த உதவிக்கான காசோலையைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள், துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி மற்றும் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் ஜூகி அலி ஆகியோருடன் இணைந்து வழங்கினார்.

மாரா மற்றும் பேங்க் பெர்தானியான் மலேசியா பெர்ஹாட் (அக்ரோ பேங்க்) இடையே RM100 மில்லியன் மதிப்புள்ள நிதி உதவியில் மாற்று ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தப் (MoU) பரிமாற்றமும் பிரதமர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த மினி கார்னிவல் நெகிரி செம்பிலான், கெடா, பினாங்கு, சிலாங்கூர், கிளந்தான் மற்றும் திரங்கானு ஆகிய ஆறு மாநிலங்களிலும் நடத்தப்படுகிறது.


இந்த நிகழ்ச்சி 100க்கும் மேற்பட்ட உள்ளூர்த் தொழில்முனைவோரை ஒன்றிணைப்பதோடு, மூன்று நாட்களில் RM200,000 விற்பனை மற்றும் 10,000 வருகையாளர்களை இலக்காகக் கொண்டுள்ளது.


Pengarang :