SELANGOR

ஏடிஸ் ஒழிப்பு வீடியோ தயாரிப்பு போட்டியின் மூலம் RM1,500 பரிசை வெல்லும் வாய்ப்பு

ஷா ஆலம், ஜூலை 23: ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) ஏற்பாடு செய்துள்ள ஏடிஸ் ஒழிப்பு வீடியோ தயாரிப்பு போட்டியின் மூலம் மொத்தம் RM1,500 பரிசு வெல்லும் வாய்ப்பை மக்களுக்கு வழங்கியுள்ளது.

இப்போட்டியில் பங்கேற்க ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 20 வரை நடைபெறும் சுற்றுச்சூழல் சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னிட்டு ஏடிஸ் கொசுகளை ஒழிக்கும் வகையில் ஆக்கப்பூர்வமான 3C (சரிபார்த்தல், சுத்தம் செய்தல், வசதி) வீடியோவை உருவாக்க வேண்டும்.

“ஆர்வமுள்ள நபர்கள் 1 நிமிடம் 30 வினாடிகளுக்கு மிகாமல் ஒரு வீடியோவை உருவாக்க வேண்டும் மற்றும் கொடுக்கப்பட்ட குறியீட்டு உடன் டிக்டோக், முகநூல் அல்லது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக கணக்கில் பதிவேற்ற வேண்டும்,” என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

வீடியோ பதிவு மலாய் மொழியில் இருக்க வேண்டும் என்றும் பங்கேற்பாளர்கள் விண்ணப்பப் படிவத்தில் வீடியோ இணைப்பைச் சேர்க்க வேண்டும் என்றும் அவர் விளக்கினார்.

தெளிவான மற்றும் போட்டியின் கருப்பொருளுக்கு பொருந்தக்கூடிய வீடியோ பதிவுகள் மட்டுமே மதிப்பீடு செய்யப்படும் ஷா ஆலம் மாநகராட்சி அறிவித்துள்ளது.

ஆர்வமுள்ளவர்கள் பின்வரும் இணைப்பை bit.ly/PertandinganVideo3C23 நாடுவதன் மூலம் கூடுதல் தகவல்களைப் பெறலாம் அல்லது போஸ்டரில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம்.


Pengarang :