NATIONAL

அரசு ஊழியர்களுக்கு நிலையான ஊதிய முறை- ஓரிரு வாரங்களில் பிரதமர் அறிவிப்பார்

கோத்தா பாரு, ஜூலை 24 – ஆசிரியர்கள் உட்பட அரசு  ஊழியர்களுக்கு நிலையான ஊதிய முறையை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்  இப்ராஹிம் அடுத்த வாரம்    அல்லது இரண்டு வாரங்களில்  அறிவிப்பார்.

அடுத்த வாரம்   நடைபெற இருக்கும் சம்பளத்  திட்டம் சீரமைப்பு  தொடர்பான முதலாவது  நிர்வாகக் கூட்டத்திற்குத் தாம்  தலைமை தாங்கவுள்ளதாக  நிதியமைச்சருமான அன்வார்   கூறினார்.

சம்பள சீரமைப்பு  திட்டத்திற்கான பழைய   அணுகுமுறையை    மறுசீரமைக்க வேண்டும் என்று  நான் நினைக்கிறேன். இதன்  தொடர்பான அறிவிப்பு மற்றும்   சில மாற்றங்களுக்கு ஓரிரு   வாரங்களுக்கு காத்திருக்கவும்   என்று அவர் சொன்னார்.


நேற்று, குபாங் கிரியான்  அருகே உள்ள மலேசிய அறிவியல்   பல்கலைக்கழக சுகாதார    வளாகத்தில் கல்வி சேவை அதிகாரிகளுடனான ; சக்னா மடாணி  நிகழ்வில் அன்வார்  இதனைத் தெரிவித்தார். 
கல்வி அமைச்சர் ஃபாட்லினா சீடேக்கும் இந்நிகழ்வில்  கலந்து கொண்டார்.

நாட்டின் பொருளாதார   ஆற்றலின் அடிப்படையில்   பொதுச் சேவைத்    துறையின் சம்பளத் திட்டத்தை  படிப்படியாக  மேம்படுத்துவதற்கான பரிந்துரை முன்வைக்கப்படும் என்று அன்வார் கடந்த 13ஆம்  தேதி கூறியிருந்தார்.

ஆகஸ்ட் 12 ஆம் தேதி மாநிலத்   தேர்தல்கள் நடை பெறுவதற்கு  முன்னர் அரசாங்கத் தலைமைச்  செயலாளர் டான்ஸ்ரீ முகமட்  ஸுகி அலி மற்றும் பொது   சேவைத் துறையின் தலைமை  இயக்குநர் டத்தோ சுல்காப்லி  முகமட் ஆகியோருடனான சந்திப்பில் இது குறித்து  விவாதிக்கப்படும் எனவும்  அவர் தெரிவித்திருந்தார்.


Pengarang :