SELANGOR

பழுதடைந்த பள்ளிகளைச் சீரமைக்கக் கூடுதலாக வெ.140 கோடி ஒதுக்கீடு- பிரதமர் அறிவிப்பு

கோத்தா பாரு, ஜூலை 24- நாட்டில் உள்ள பழுடைந்தப் பள்ளிகளை சீரமைக்க 140
கோடி வெள்ளி இவ்வாண்டு கூடுதலாக ஒதுக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிம் நேற்று அறிவித்தார்.

கிளந்தானுக்கு ஒதுக்கப்படும் 18 கோடியே 53 லட்சத்து 70 ஆயிரம் வெள்ளி, திரங்கானுவுக்கு ஒதுக்கப்படும் 7 கோடியே 89 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளி மற்றும் பகாங் மாநிலத்திற்கு
வழங்கப்படும் 6 கோடியே 41 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியும் இதில் அடங்கும்.

மாநிலத் தேர்தல்கள் நடைபெறுவதால் இந்த நிதி ஒதுக்கீடை நாங்கள் வழங்கவில்லை. மாறாக அவசியம் கருதி இந்நிதியை வழங்குகிறோம் என்று அவர் கூறினார்.

நேற்று இங்கு நடைபெற்ற கல்வி அமைச்சின் அதிகாரிகளுடனான "சக்னா
மடாணி நிகழ்ச்சியில் ஆசிரியர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில் நிதியமைச்சருமான அவர் இவ்வாறு பதிலளித்தார் .

இங்குள்ள குபாங் கிரியானில் உள்ள மலேசிய அறிவியல் பல்கலைக்கழக சுகாதார
வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கிளந்தான், திரங்கானு மற்றும்
பகாங்கைச் சேர்ந்த சுமார் 1,500 கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கல்வி அமைச்சின் கீழ் உள்ள பள்ளிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களுக்கு 50,000
மடிக்கணினிகளை வழங்க அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அக்டோபரில் அவை மாணவர்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அன்வார் சொன்னார்.

டெண்டர் முறை பயன்படுத்தப்பட்டதால்ன்கணினிகளை வாங்குவதில் சிறிது தாமதம்
ஏற்பட்டுள்ளது. பொதுவாக டெண்டர் முறையின் கீழ் கொள்முதல் பணிக்கு ஆறு
மாதங்கள் வரை அவகாசம் தேவைப்படும்.

டெண்டர் முறை இல்லை என்றால் பிரச்சனை ஏற்படும் என்றார் அவர். அவசரத் தேவை இருக்கும் பட்சத்தில் நாங்கள் நிதியபைச்சை அணுகி சற்று நீக்குப் போக்கை கடைபிடிக்கும்படி கேட்டுக் கொள்வோம். இதன் மூலம் வரையறுக்கப்பட்ட டெண்டர்
செயல்முறையைப் பின்பற்றி மூன்று மாதங்களுக்குள் பணிகளை முடிக்க முடியும் என்று அவர் கூறினார்.

அந்தந்த மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் இலக்கவியல் மயமாக்கல் திட்டத்தை மேம்படுத்துவதற்காகக் கிளந்தானுக்கு 44 லட்சம் வெள்ளியும் திரங்கானுவுக்கு
22 லட்சம் வெள்ளியும் பகாங்கிற்கு 29 லட்சம் வெள்ளியும் ஒதுக்கப்படும் என்றும் அன்வார் அறிவித்தார்.


Pengarang :