NATIONAL

மாநில அரசின் மூன்று தவணைக் கால சாதனைகள் தேர்தல் பிரசாரப் பொருளாகப் பயன்படுத்தப்படும்- மந்திரி புசார்

ஷா ஆலம், ஜூலை 24- எதிர்வரும் ஆகஸ்டு மாதம் 12ஆம் தேதி நடைபெறும்
தேர்தலில் வெற்றி பெறுவதை உறுதி செய்வதற்குக் கடந்த 2008ஆம் ஆண்டு
முதல் மாநில அரசு புரிந்துள்ள சாதனைகள் பிரசாரத்திற்கான
கருப்பொருளாகப் பயன்படுத்தப்படும்.

இந்த தேர்தல் பிரசாரத்தின் பொது புதுப்பிப்பு, அனுபவம், வரலாறு, நடப்பு
சாதனைகள் மற்றும் சிலாங்கூர் மக்களுக்கான எதிர்காலத் திட்டங்கள்
தொடர்பான கருப்பொருளை தாங்கள் முன்னிலைப்படுத்தவுள்ளதாக மந்திரி
புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பதினைந்து ஆண்டு கால அனுபவம் உள்ள பக்கத்தான் ஹராப்பான்
நிர்வாகம் எதிர்க்கட்சியாக இருந்த போது பல்வேறு சூழ்நிலைகளைக்
கையாள்வது தொடர்பான பல சோதனைகளை எதிர்கொண்டு தேறியும்
உள்ளது என்று அவர் கூறியதாக சினார் ஹரியான் செய்தி
வெளியிட்டுள்ளது.

ஷெரட்டோன் நகர்பு மூலம் பக்கத்தான் அரசாங்கம் கவிழும் வரை 22
மாதங்கள் மத்திய அரசாங்கத்துடன் இணைந்திருந்தோம். (2028 மே 10
முதல் 2020 பிப்ரவரி 22 வரை) இப்போதும் நாங்கள் அதே உணர்வுடன்
மத்திய அரசில் இணைந்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.

பக்கத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் கூட்டணிகள்
பாரம்பரிய நிலைப்பாட்டில் கூட்டணியை வலுப்படுத்தும் என்றும் அவர்
சொன்னார்.

எதிர்வரும் மாநிலத் தேர்தலில் ஆட்சியமைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டால்
மாநில அரசு கல்விக்கு குறிப்பாக இடைநிலைப்பள்ளிக்குப் பிந்தைய
கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் எதிர்வரும் ஆகஸ்டு மாதம் 12 ஆம்
தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இம்மாதம் 29ஆம் தேதியும் தொடக்கக் கட்ட வாக்களிப்பு ஆகஸ்டு 9ஆம் தேதியும் நடைபெறும்.


Pengarang :