SELANGOR

இ-பங்கிலான் தொழிலாளர்களுக்கு “பிட் ஸ்டாப் ரஹ்மா` ((Pit Stop Rahmah)  – சுங்கை ரமால் தொகுதி

ஷா ஆலம், ஜூலை 27: கடந்த ஜூலை 25ஆம் தேதி, பண்டார் பாரு பாங்கி, செக்‌ஷன் 9யில் உள்ள இ-பங்கிலான் தொழிலாளர்களுக்கு “பிட் ஸ்டாப் ரஹ்மா“ (Pit Stop Rahmah)  முழுமையாக முடிக்கப்பட்டு செயல்படத் தொடங்கியது.

சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் (PSP) ஒதுக்கீட்டின் மூலம் RM40,000 செலவில்“பிட் ஸ்டாப் ரஹ்மா“ கட்டப்பட்டது என சுங்கை ரமால் தொகுதியின் நடப்பு உறுப்பினர் மஸ்வான் ஜோஹர் கூறினார்.

“பண்டார் பாரு பாங்கி பிகேஎன்எஸ் வளாகத்திற்கு முன்னால் அமைந்துள்ள இந்த “பிட் ஸ்டாப் ரஹ்மா“ சுங்கை ரமால் தொகுதி மற்றும் காஜாங் நகராண்மை கழகம் (MPKj) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டது.

“இந்த “பிட் ஸ்டாப் ரஹ்மா“ இ-பங்கிலான் பணியாளர்கள் ஓய்வெடுக்க உதவும் வகையில் அமைக்கப் பட்டுள்ளதால் அதை சிறந்த முறையில் பயன்படுத்தப்படும் என்று நம்பப்படுகிறது” என்று அவர் முகநூல் மூலம் தெரிவித்தார்.

ஏப்ரல் 6ஆம் நாள் அன்று, இ-பங்கிலான் தொழிலாளர்களுக்கான “பிட் ஸ்டாப் ரஹ்மா“ திட்டத்தை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சர் மறைந்த டத்தோஸ்ரீ சலாவுடின் அயூப் அவர்கள் தொடக்கி வைத்தார்.


Pengarang :